அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோரை எதிர்வரும் 31ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவினை மீறி, சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கடந்த 10ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமைக்காக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குறித்த இருவரையும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.