விடாமுயற்சிக்கு வயது தடையில்லை: 5 மணி நேர பிளாங்கிங் சாதனை

Published By: Digital Desk 1

12 Oct, 2026 | 02:10 PM
image

கனடாவை சேர்ந்த 61 வயதான டோனஜீன் வைல்ட்  என்ற மூதாட்டி ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக  வெற்றிகரமாக உடற்பயிற்சி  பிளாங்கிங் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்  இடம்பிடித்துள்ளார்.

டோனஜீன் வைல்ட், கடந்த வாரம் ஹன்ட்ஸ்மேன் உலக மூத்தோர் விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்வில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

டோனஜீன் வைல்ட்  12 பேரக் குழந்தைகளின் பாட்டி என்பதோடு , பெண் பிரிவில் மிக நீண்ட நேரம் பிளாங்க்  செய்ததற்கான அவரது சொந்த கின்னஸ் உலக சாதனை முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பு மார்ச் 21, 2024 அன்று அவர் 4 மணி 30 நிமிடங்கள் 11 விநாடிகள் உடற்பயிற்சி  பிளாங்கிங்  செய்து சாதனை படைத்திருந்துள்ளார்.

தனது உடல் வலிமைக்குப் பின்னால் கடின உழைப்பு இருப்பதாகவும், பிளாங்கிங் தவிர, புஷ்-அப்ஸ், பளுதூக்குதல் மற்றும் ஓட்டம் ஆகிய ஓட்டம் ஆகியவை தனது தினசரி பயிற்சியின் ஒரு பகுதி என்றும் அவர் கூறியுள்ளார்

பிளாங்க் பயிற்சியின் போது தனது 3 வயது பேத்தியான   ரோஸை தனது முதுகின் மீது படுக்க வைத்து பயிற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிளாங்க் சாதனை மற்றும் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,575 புஷ்-அப்கள் செய்தமைக்காக மற்றொரு கின்னஸ் பட்டத்தையும் வைல்ட் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவரின் அடுத்த இலக்கு எதிர்காலத்தில் ஒரு மணி நேரத்தில் 1,600-க்கும் மேற்பட்ட புஷ்-அப்களை செய்து தனது சொந்த புஷ்-அப் சாதனையை முறியடிக்க விரும்புவதாகக்   தெரிவித்துள்ளார். 

வயது ஒரு தடையல்ல, எதையும் சாதிக்க முடியும் என்பதை டோனஜீன் வைல்ட் மற்றும் அவரைப் போன்ற பல சாதனையாளர்கள் தங்கள் விடாமுயற்சியால் நிரூபித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கந்த சஷ்டி விரத நாளில் திருப்புகழுக்கு...

2026-11-16 11:14:02
news-image

குப்புறக் கிடந்த ஆமையை நிமிர்த்தி உதவி...

2026-11-04 15:23:36
news-image

90 வயது ஆணழகன்! ; நம்பிக்கை...

2026-11-02 15:05:23
news-image

இது கரப்பான் பூச்சி ஃப்ரை ;...

2026-10-28 15:53:42
news-image

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ‘தலுக்கு புலுக்கு தக்காளி’...

2026-10-25 17:22:32
news-image

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல்...

2026-10-17 16:47:42
news-image

10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடந்த...

2026-10-15 12:07:28
news-image

காகித விமானங்களை வாயினாலேயே கவ்விப் பிடித்து...

2026-10-14 14:04:50
news-image

விடாமுயற்சிக்கு வயது தடையில்லை: 5 மணி...

2026-10-12 14:10:55
news-image

இன்று வானில் தென்படும் சனியின் ‘எதிர்நிலை...

2026-10-04 16:14:53
news-image

டோக்கியோவில் கலக்கிய ‘பவள மல்லி’: ஜப்பானியர்களிடையே...

2026-10-03 17:55:05
news-image

“Back to the 80s” ட்ரெண்டில்...

2026-09-17 14:52:19