ஒஸ்டியோட் ஒஸ்டியோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

12 Oct, 2026 | 01:59 PM
image

இன்றைய சூழலில் எம்மில் சிலருக்கு இரவு நேரத்தில் தொடை எலும்பு, தொடை பகுதி, கால் எலும்பு பகுதிகளில் தாங்க இயலாத வலி இருக்கும். இதற்கு வலி நிவாரணிகளை நிவாரணமாக மேற்கொண்டாலும், வலி பலருக்கு தொடரக் கூடும்.

இத்தகைய பாதிப்பு மருந்தியல் சிகிச்சைக்குப் பிறகும் தொடர்ந்தால் அவை மருத்துவ மொழியில் ஒஸ்டியோட் ஒஸ்டியோமா எனும் எலும்புகளில் ஏற்படும் கட்டி பாதிப்பு என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

ஓஸ்டியோ ஓஸ்டியோமா என்பது எம்முடைய எலும்பு பகுதிகளில் ஏற்படும் தீங்கற்ற அதாவது புற்றுநோய் அல்லாத சிறிய அளவிலான கட்டியாகும். சிலருக்கு இது முதுகெலும்பிலும் ஏற்படக்கூடும்.

மேலும் இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் நான்கு வயது முதல் 25 வயது உள்ள சிறார்களையும், இளைஞர்களையும் பாதிப்பதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. வேறு வயதினரையும் தாக்கக்கூடும்.

சிலருக்கு இதனை தொடக்க நிலையில் கண்டறியாமல் இருந்தால், எலும்பு சிதைவு, தசை சிதைவு நடையில் மாற்றம் கால்களின் நீளத்தில் வேறுபாடு, வளர்ச்சி சார்ந்த குறைபாடு ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும்.‌

மேலும் இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் நீண்ட அளவில் உள்ள எலும்புகளின் நடுப்பகுதியில் ஏற்படுகிறது. இவை தோராயமாக இரண்டு செ. மீ. அளவுக்குள் உண்டாகும் கட்டியாகும்.

வலது தொடை, இடது தொடை அல்லது கால் எலும்புகளில் மரத்தல், வலி, கூர்மையான வலி, நீடித்த வலி ஆகியவை இரவு நேரங்களில் ஏற்படும். இவைதான் இதன் முதன்மையான அறிகுறியாகும். சிலருக்கு கால் பகுதியில் தசை பிடிப்பு பாதிப்பும் அறிகுறியாக தோன்றும்.

இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், போன் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு, அந்த முடிவின் அடிப்படையில் சிகிச்சையை தீர்மானிப்பர். சிலருக்கு ரேடியோ ஃப்ரீக்குவன்சி அப்ளேஷன் எனப்படும் சிகிச்சை மூலமாக நிவாரணம் வழங்குவர்.

வெகு சிலருக்கு மட்டும் சிறிய அளவிலான சத்திர சிகிச்சையை செய்து இந்த கட்டி பாதிப்பை நீக்கி முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

வைத்தியர் யோகேஷ்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூக்கடைப்பு பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை-...

2026-11-14 15:45:24
news-image

இரத்த நாள அடைப்பை நீக்கும் நவீன...

2026-11-13 15:26:37
news-image

பிட்யூற்றரி மேக்ரோஅடினோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய...

2026-11-12 15:10:08
news-image

பெல்விக் அசிடபுலர் ஃப்ராக்சர் எனும் இடுப்பு...

2026-11-11 16:42:12
news-image

ஸ்போண்டிலோஸிஸ்டெசிஸ் எனும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும்...

2026-11-10 15:59:08
news-image

நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-11-07 16:35:21
news-image

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனும் இதய தசை...

2026-11-06 18:17:18
news-image

பித்தப்பை சுவர் சிதைவு நோய் பாதிப்பிற்கான...

2026-11-05 16:52:08
news-image

அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

2026-11-04 14:01:10
news-image

கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை...

2026-11-03 14:47:47
news-image

வாஸ்குலர் ரிங் எனும் பிறவி இதயக்...

2026-11-02 13:47:27
news-image

கான்ட்ராஸ்ட் இன்டீயூஸ்டு கிட்னி இன்ஜுரி எனும்...

2026-10-31 14:40:04