மெர்சல் வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 170 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் தளபதி விஜயின் அதிகாரபூர்வ லெட்டர்பேடிலிருந்து நன்றி அறிவிப்பு வெளியானது.

இது குறித்து திரையுலகினர் சிலர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய லெட்டர் பேடில் நன்றியையோ அல்லது வேறு ஏதேனும் செய்தியை தெரிவிக்கும் போது அதில் அவரது கையெழுத்து இடம்பெற்றிருக்கும். ஆனால் தளபதி விஜயின் நன்றி அறிவிப்பில் அது இடம்பெறவில்லை என்று சுட்டிகாட்டினர். ஆனால் சில அனுபவமிக்கவர்கள், இதுவாவது பரவாயில்லை. இதற்கு முன் அவரின் நன்றியறிவிப்பு ஒரு வெள்ளைக்காகிதத்தில் மொட்டையாக வெளியாகும் என்று குறிப்பிட்டனர். உடனடியாக ரசிகர்கள் இதுக்கு கூட சர்ச்சையை கிளப்பினால் எப்படி? என வருத்தமடைகிறார்கள். 

ஆனால் தளபதியின் இந்த நன்றி அறிவிப்பு அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்பது தான் விசேடம்.

தகவல் : சென்னை அலுவலகம்