இரண்டாவது சர்வதேச ரி20இல் இலங்கையை துவம்சம் செய்த பாகிஸ்தான் தொடரைக் கைப்பற்றியது

Published By: Vishnu

11 Oct, 2026 | 10:49 PM
image

(நெவில் அன்தனி)

ராவல்பிண்டியில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்த பாகிஸ்தான் 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க பாகிஸ்தான் 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 215 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் அணித் தலைவர் சஹிப்ஸதா பர்ஹான் 73 ஓட்டங்களையும் மாஸ் சதாகத் 96 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தசுன் ஷானக்க, ஏஷான் மாலிங்க, மஹீஷ் தீக்ஷன ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

216 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

மத்திய வரிசை வீரர்களான சமிந்து விக்ரமசிங்க (29), மஹீஷ் தீக்ஷன (32 ஆ.இ.) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்களை விட கமிந்து மெண்டிஸ் 23 ஓட்டங்களையும் சினேத் ஜயவர்தன 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹம்மத் இம்ரான் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சல்மான் மிர்ஸா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மாஸ் சதாகத்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா - பூட்டான், பங்களாதேஷ் -...

2026-11-14 11:47:31
news-image

இந்தியாவை துவம்சம் செய்து  இரண்டாவது   மிகப்...

2026-11-14 06:39:43
news-image

மகளிர் முன்னேறிவரும் நாடுகள் கிரிக்கெட: ஸ்கொட்லாந்தை...

2026-11-14 04:23:55
news-image

இலங்கையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெஸ்ட் போட்டியை...

2026-11-14 04:20:49
news-image

பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல்,...

2026-11-12 16:45:31
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான  முதலாவது   டெஸ்ட் போட்டியில்...

2026-11-12 04:30:02
news-image

இங்கிலாந்திலிருந்து அழைக்கப்பட்ட ஹம்சா, பர்ஹான் ஆகியோர்...

2026-11-12 04:17:39
news-image

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி ;...

2026-11-11 16:08:40
news-image

நாங்கள் விளையாடுவது கால்பந்தாட்டம், கிரிக்கெட் அல்ல,...

2026-11-11 11:37:01
news-image

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்...

2026-11-11 06:24:07
news-image

அறிமுக வீரர்கள் மூவர் குவித்த அரைச்...

2026-11-10 19:32:54
news-image

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான...

2026-11-10 00:21:02