தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தின் ஊடாக, வரவிருக்கும் 2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பாடசாலை உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான வாட் வரி உள்ளிட்ட ஏனைய வரிகளை நீக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், பாடசாலைப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், கல்விசார் உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி நிவாரணம் வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தி தனது 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தோடு தேசிய ரீதியில் உற்பத்திய செய்யப்படும் பால், முட்டை மற்றும் சிறுவர்களுக்கான பால் மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு பூச்சிய சதவீத (0%) 'வாட்' வரி வீதம் முன்மொழியப்பட்டிருந்தமையை சுட்டிக்காட்டியுள்ள அவர், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விசேட அறிக்கையையும் (தேர்தல் அறிக்கை) இதன்போது மேற்கோள்காட்டியுள்ளார். எனவே, இந்தப் பொருட்கள் மீது தற்போது நடைமுறையிலுள்ள வரிகளை மறுபரிசீலனை செய்து, வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வாக்குறுதி அளிக்கப்பட்ட வரி நிவாரணங்களை வழங்குமாறு நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிகரித்து வரும் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், பிள்ளைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்துக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் பெரிதும் உதவும் என்றும் அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM