(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை நடைபெற்ற சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டியில் நடப்பு சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார் கழகத்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட நாவலப்பிட்டி அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் 5 - 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
சுப்பர் லீக் கால்பந்தாட்டத்தின் முதலாவது வாரத்தில் புளூ ஸ்டார் கழகத்தை 9 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்த அப்கன்ட்றி லயன்ஸ் கழகம், இன்றைய போட்டியை இலகுவாக எடுத்துக்கொண்டு விளையாடியதாலேயே சவாலை எதிர்கொள்ள நேரிட்டது.
மேலும் போட்டி முழுவதும் அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் ஏகப்பட்ட கோல்போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது.
அப்கன்ட்றி லயன்ஸ் ரீபவுண்ட் பந்துகளைக்கொண்டு கோல்களைப் போட்டதுடன் புளூ ஸ்டார் கழகம் நேரத்தியான பந்து பரிமாற்றங்கள் மூலம் கோல்ளைப் போட்டது.

போட்டியின் 7ஆவது நிமிடத்தில் நவீன் ஜூட் கோல் போட்டு அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்தை முன்னிலையில் இட்டார்.
எனினும், 26ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் கழகம் சார்பாக மொஹமத் ஷிஹாப் சுமார் 20 யார் தூரத்திலிருந்து மிகவும் அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

இடைவேளைக்கு 4 நிமிடங்கள் இருந்தபோது பெஞ்மின் யோர்க் பெனல்டி எல்லைக்குள் இருந்து போட்ட கோல் அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்தை இடைவேளையின்போது 2 - 1 என முன்னிலையில் இட்டது.

இடைவேளைக்குப் பின்னர் 12 நிமிட இடைவெளியில் அப்கன்ட்றி லயன்ஸ் மேலும் 3 கோல்களைப் போட்டு 5 - 1 என முன்னிலை அடைந்தது.
பெஞ்சமின் யோர்க் 68ஆவது நிமிடத்திலும் அப்துல் ரஹ்மான் யஹியா 69ஆவது நிமிடத்திலும் பெஞ்சமின் யோர்க் மீண்டும் 78ஆவது நிமிடத்திலும் கோல்களைப் போட்டனர்.

ஆனால், புளூ ஸ்டார் கழகத்தின் மாற்றுவீரர் மொஹமத் சஹ்லான் 84ஆவது நிமிடத்திலும் அணித் தலைவர் ஜெறி ஒம்பெபே 90 + 2ஆவது நிமிடத்திலும் அற்புதமான கோல்களைப் போட்டு அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்துக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
எனினும், உபாதையீடு நேரத்தில் தாக்குப்பிடித்து கட்டுப்பாட்டுடன் விளையாடிய அப்கன்ட்றி லயன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM