ஜிபூட்டியிலிருந்து ஏமன் நோக்கிப் பயணித்த படகு விபத்து: 109 புலம்பெயர்ந்தோர் பலி; 116 பேர் மாயம்!

Published By: Vishnu

11 Oct, 2026 | 08:57 PM
image

ஜிபூட்டியிலிருந்து ஏமன் நோக்கிப் பயணித்த படகு கவிழ்ந்ததில், 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 109 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதுடன், 116க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.

கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட இரவில், ஜிபூட்டியின் ஓபோக் துறைமுக நகருக்கு வடக்கே உள்ள குஹெரே பகுதிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 52 ஆண்கள், 42 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன், உயிர் பிழைத்தவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன.

பொருளாதார வாய்ப்புகளைத் தேடி ஆபத்தான கடல் வழியாகப் பயணிக்கும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் அபாயத்தை இச்சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக IOM குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து மூதாட்டிக்கு இறுதிச் சடங்கு :...

2026-11-11 16:07:22
news-image

இஸ்ரேல் பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு மதன்...

2026-11-11 11:00:23
news-image

பிரித்தானியாவின் இரண்டாவது இராணுவத்தளத்திலிருந்தும் அமெரிக்க விமானப்படையின்...

2026-11-10 17:44:03
news-image

தென் கொரிய மண்ணில் திருவள்ளுவர் சிலை...

2026-11-10 15:49:51
news-image

துருக்கியில் இரும்பு தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம்:...

2026-11-10 13:20:58
news-image

என்விடியா பிரதம நிறைவேற்று அதிகாரி ஜென்சன்...

2026-11-10 12:21:57
news-image

உக்ரைன் ஜனாதிபதியுடன் மோடி பேச்சு: போருக்கு...

2026-11-10 11:10:51
news-image

பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர் ராபியா அசன்...

2026-11-10 11:04:16
news-image

செனகல் கடற்பகுதியில் படகு விபத்து: உயிரிழப்பு...

2026-11-09 12:41:18
news-image

எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் மோதி...

2026-11-09 12:35:15
news-image

கோல்ஃப் மைதானம் அமைக்க 430 மரங்கள்...

2026-11-09 12:26:53
news-image

ஜப்பானில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி 

2026-11-08 11:51:47