உலகளாவிய ரீதியில் தீவிரவாதிகளின் தாக்குதல்களை ஒடுக்குவது பற்றிய பாதுகாப்புத் தலைவர்களின் மாநாட்டில் பாதுகாப்புப் படை பிரதானி அட்மிரல் ரவீந்திர சி.விஜேகுணரட்ன கலந்துகொண்டார்.

எழுபதுக்கும் அதிகமான நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கலந்துகொள்ளும் இரண்டாவது சர்வதேச மாநாடு அமெரிக்காவின் வேர்ஜீனியாவில் கடந்த 23ஆம், 24ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இதன்போது, தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக நாடுகளிடையே ஏற்படுத்தப்படவேண்டிய தொடர்பாடல் மற்றும் பரஸ்பர உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.