கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான துப்பாக்கிதாரி கைது

Published By: Digital Desk 1

11 Oct, 2026 | 05:16 PM
image

கொட்டாவை பொலிஸாரினால்  மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதித் தடை சோதனையின் போது, 10,500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன்  சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம்  மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின், அவர் பல கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், சந்தேகநபர் விமானப்படையில் இருந்து தப்பிச் சென்றவரென்றும் , வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாக நம்பப்படும் 'தெஹிவளை சண்டோ' என்ற பாதாள உலகக் குழுத் தலைவனின் பிரதான துப்பாக்கிதாரியாகச் செயல்பட்ட ஒப்பந்தக் கூலிப்படை கொலையாளி என்பதும் தெரியவந்துள்ளது.

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் சந்தேகநபர் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை (மவுண்ட் லவனியா) பகுதிகளில் இடம்பெற்ற இரு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர் இவர் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி இவரே என்பதையும் ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில், சந்தேகநபர் அளித்த தகவலின் பேரில்  கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் பாதாள உலகக் குழுவினரின் ஆலோசனையின் பேரில், எதிர்வரும் நாட்களில் கல்கிஸ்ஸை பகுதியில் பல கொலைகளைச் செய்யத் திட்டமிட்டிருந்த முயற்சி, இந்த கைது நடவடிக்கையின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24