பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை ஹொரவ்பொத்தான பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த மாணவி நேற்று (25) பகல் பாடசாலை முடிந்து தனியே வீடு திரும்பினார். அப்போது அவரது உறவினரான பாதுகாப்புப் படை உறுப்பினர், மாணவியை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார்.

ஆனால் மாணவியின் வீட்டுக்குச் செல்லாமல் மரதமடுவவில் ஆளரவமற்ற நீர்த்தாங்கி ஒன்றின் அருகே சென்ற அவர், அங்கு வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மாணவி வீடு திரும்பியதும் இதுபற்றித் தெரிந்துகொண்ட மாணவியின் தாய் ஹொரவ்பொத்தான பொலிஸில் புகாரளித்துள்ளார்.

இதையடுத்து, இரு பிள்ளைகளின் தந்தையும், ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவருமான குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.