நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 1

11 Oct, 2026 | 04:19 PM
image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற வீதி விபத்துகளில் ஹிக்குவடுவை, ஹொரனை மற்றும் எம்பிலிப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்குவடுவைவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹிக்குவடுவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, வீட்டின் வலதுபுறமுள்ள பக்கத்து வீதிக்குத் திரும்புவதற்காக முயன்றபோது, அதே திசையில் பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களின் ஓட்டுநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் டொந்தடுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவராவார்.

இதேவேளை, ஹொரனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலக்கந்த வீதியில், சோரனவத்தை நோக்கி இறப்பர் மரங்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த டிராக்டர் சாரதி ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், எம்பிலிப்பிட்டி - மொரகெட்டிய வீதியில், எம்பிலிப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 03 ஆம் இலக்கத் தூண்களுக்கு அருகில் மொரகெட்டிய நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, அதே திசையில் சென்ற கார் மீதும், அதனைத் தொடர்ந்து எதிரே வந்த அம்யுலன்ஸ் வண்டி மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் செவனகல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஆவார்.

குறித்த விபத்துக்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஹிக்கடுவை ஹொரனை மற்றும் எம்பிலிபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24