றினோன் கழகத்தை வீழ்த்தி வரலாறு படைத்தது ரெட் ஸ்டார்

Published By: Digital Desk 2

11 Oct, 2026 | 04:06 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (10) நடைபெற்ற சுப்பர் சிக்ஸ் சுற்றின் ஆரம்பப் போட்டியில் பிரபல கழகங்களில் ஒன்றான றினோன் கழகத்தை 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு பேருவளை தர்கா நகர் ரெட் ஸ்டார் கழகம் வரலாறு படைத்தது.

இந்த வருட சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் ரெட் ஸ்டார் ஈட்டிய மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.

லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் றினோன் அணியின் தலைமைப் பயிற்றுநர் பஸ்லுர் ரஹுமான் சிவப்பு அட்டைக்கு இலக்கானதால் நேற்றைய போட்டியில் பார்வையாளராக அரங்கிலிருந்து போட்டியை பார்வையிட நேரிட்டது.

அவர் இல்லாதது அணிக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரெட் ஸ்டார் கழகத்தின் எதிர்த்தாடல், தடுத்தாடல் ஆகிய வியூகங்களை சமாளிப்பதில் றினோன் கழக வீரர்கள் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டனர்.

றினோன் கழகத்தின் மத்திய கள வீரர்களில் வெளிநாட்டவரான ஆப்டெல்பட்டா அஹ்மத் மாத்திரமே திறமையாக விளையாடினார்

போட்டியின் 32ஆவது நிமிடத்தில் றினோன் கழக பின்வரிசையில் ஏற்பட்ட தடுமாற்றதை நன்கு பயன்படுத்திக்கொண்ட ரெட் ஸ்டார் கழக முன்கள வீரர் அசண்டே ஜெரோம் மிக இலகுவான கோல் ஒன்றைப் போட்டார்.

தொடர்ந்து 62ஆவது நிமிடத்தில் மீண்டும் றினோன் கழகத்தின் பின்களத்தில் தடுமாற்றம் ஏற்பட்டதைப் பயன்படுத்தி துவான் சியாம் கோல் போட்டு ரெட் ஸ்டார் கழகத்தின் கோல் எண்ணிக்கையை 2ஆக உயர்த்தினார்.

இந்தப் போட்டி முடிவு ரெட் ஸ்டார் கழகத்துக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்த அதேவேளை, றினோன் கழகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி ;...

2026-11-11 16:08:40
news-image

நாங்கள் விளையாடுவது கால்பந்தாட்டம், கிரிக்கெட் அல்ல,...

2026-11-11 11:37:01
news-image

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்...

2026-11-11 06:24:07
news-image

அறிமுக வீரர்கள் மூவர் குவித்த அரைச்...

2026-11-10 19:32:54
news-image

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான...

2026-11-10 00:21:02
news-image

'இறுதிப் போட்டியில் பங்களாதேஷும் இந்தியாவும் விளையாடட்டும்'...

2026-11-10 00:18:22
news-image

கொமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2026

2026-11-09 19:17:14
news-image

சாவ் சம்பின்ஷிப்பில் பூட்டானுக்கு எதிரான போட்டியில்...

2026-11-08 22:18:41
news-image

19இன் கீழ் ஆடவர் ஆசிய கிண்ண...

2026-11-06 20:56:55
news-image

குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட 3 நாள்...

2026-11-06 19:27:40
news-image

இளையோர் ஒலிம்பிக் ஆண்களுக்கான 200 மீற்றர்...

2026-11-06 18:12:26
news-image

இந்தியா – இலங்கை ஒருநாள் கிரிக்கெட்...

2026-11-06 09:30:30