(நமது நிருபர்)
தம்புளை ஆரம்ப வைத்தியசாலைக்கான அதிநவீன அனைத்து வசதிகளுடனும் கூடிய புதிய வைத்தியசாலை கட்டிடத்தொகுதியை உருவாக்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியை சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார்.
தம்புள்ள முதன்மை வைத்தியசாலையில் நிலவும் நெறுக்கடி மற்றும் இடப்பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வை வழங்கும் நோக்கில், 12 பில்லியன் ரூபா செலவில் இந்த புதிய வைத்தியசாலை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்காக தம்புள்ள பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொஹொரன்வெவ கிராம நிலதாரி பிரிவில் அமைந்துள்ள ரன்கிரி தம்புள்ள ரஜமஹா விகாரையினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 5 ஏக்கர் காணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, தம்புள்ள வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி மற்றும் திட்டமிடல் வைத்திய அதிகாரியான வைத்தியர் அருண குமார, புதிய காணியின் முதன்மை வரைபடம், அமைவிடம் மற்றும் திட்டமிடல்கள் குறித்து அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
திட்டத்தின் முதற்கட்ட வரைபடங்கள், பொறியியல் அறிக்கைகள் மற்றும் கட்டுமானப் பணிகளை எவ்வித தாமதமுமின்றி ஆரம்பிப்பதற்கு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்திய அமைச்சர், காணியின் முதற்கட்ட மேம்பாட்டுப் பணிகளை இவ்வாண்டுக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரைவிடுத்திருந்தார்.
தம்புள்ள பொருளாதார ரீதியாகவும், சுற்றுலா மற்றும் போக்குவரத்து ரீதியாகவும் மிக முக்கிய மையமாக திகழ்வதால், புதிய இடத்தில் இவ்வைத்தியசாலையை அமைப்பதன் மூலம் மாத்தளை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருணாகல் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு மேலும் உயர்தரமான சுகாதார சேவையை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், புதிய வளாகத்திற்கு வைத்தியசாலை மாற்றப்பட்ட பின்னர், தற்போது வைத்தியசாலை இயங்கி வரும் காணியானது தம்புள்ள நகர அபிவிருத்தி முதன்மைத் திட்டத்தின் (2022–2032) கீழ் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM