நேபாளத்தின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள புத்தி கண்டகி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, குறைந்தது 10 பேரைக் காணவில்லை எனவும், 6 பாலங்கள் மற்றும் சுமார் 35 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கோர்க்கா மாவட்டத்தின் உதவி தலைமை மாவட்ட அதிகாரி நேத்ரா பிரசாத் சர்மா தெரிவிக்கையில்,
அருக்கட், திரிபுராசுந்தரி, சோதி-மன்பு ஆகிய இடங்களில் இருந்த வாகனப் பாலங்கள் மற்றும் தார்ச்சே கிராமப்புற நகராட்சியை இணைக்கும் பெய்லி பாலம் உட்பட 2 மோட்டார் பாலங்களும் 4 தொங்கு பாலங்களும் வெள்ளத்தில் முற்றிலும் சேத மடைந்துள்ளது.
சும்னுப்ரி கிராமப்புற நகராட்சியின் பைன்யு மற்றும் பாகர் பகுதிகளில் 35 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தின் வடபகுதியில் 10 பேர் காணாமல் போயுள்ளனர். ஜகத், சல்லேரி, தோவன் மற்றும் கட்டேகோலா ஆகிய குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வான்வழியாகவும் தரைவழியாகவும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர உதவிக்காகக் கூட்டு விரைவுப் பதிலளிப்புக் குழு ஹெலிகொப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிர்திபாஸ், ஜகத், சல்லேரி, கோர்லாபேசி, மச்சாகோலா, சோதி, அர்கெட் மற்றும் அருக்கட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆற்றோர மக்கள் தாமதிக்காமல் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உள்நாட்டு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அவசர உதவிக்கு 1234 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சுமார் 184 கி.மீ தொலைவில் உள்ள இப்பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 06 பேர் இதுவரை ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM