நாட்டில் நிலவும் அசாதாரண மழைக்கால வானிலையினால் இதுவரை மொத்தம் 5,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சீரற்ற வானிலையால் 166 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,594 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த அசாதாரண வானிலை காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், 12 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், நான்கு வீடுகள் முழுமையாகவும் 953 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதனிடையே, நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 47,583 குடும்பங்களின் 156,756 பேர் வறட்சியான காலநிலையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளில் 28 பிரிவுகளில் குடிநீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேற்கொண்டு வருகிறது.
இதுவரை 38,547 குடும்பங்களைச் சேர்ந்த 128,977 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM