கோட்டை நீதவான் நீதிமன்றின் முன்பாகச் சிலர் மௌன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ்வார்ப்பாட்டம் சற்று முன் நடைபெற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர, பல்கலைக்கழகங்களில் பிக்கு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் வண. தம்பிட்டிய சுகதானந்த  மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையைக் கோரியே இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே மேற்படி மாணவர் தலைவர்களும் மாணவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.