நேபாளத்தின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள சும்னுப்ரி கிராமத்தில் ஏற்பட்ட வறண்ட மண்சரிவினால் புதிகண்டகி ஆறு தடைப்பட்டு, ஆற்றின் கீழ்நோக்கிய பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆற்றோரங்களில் வாழும் மக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு நேபாள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கில் பல வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்ட போதிலும், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள், இரண்டு தொங்கு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், நீர்மின் திட்டப் பகுதியொன்றும் சேதமடைந்துள்ளது என கோர்க்கா மாவட்ட மூத்த அதிகாரி தர்மேந்திர குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கோர்க்கா, தனஹுன், சிட்வான், கிழக்கு நாவல்பராசி மற்றும் மேற்கு நாவல்பராசி ஆகிய மாவட்டங்களில் ஆற்றோரம் வசிக்கும் மக்களுக்கு தேசிய அனர்த்த அபாயக் குறைப்பு மற்றும் முகாமைத்துவ ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேபாள இராணுவ மற்றும் பொலிஸ் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், ஹெலிகொப்டர் மூலம் நிலைமையைக் வான்வழியாகக் கண்காணித்து வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM