ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள பிளேக் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய ஆய்வக ஊழியர் உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2ஆம் திகதி குறித்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அப்பகுதியில் பிளேக் நோய்த் தொற்று எதுவும் பதிவாகவில்லை எனவும் ஸ்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது.
குறித்த ஊழியர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
உயிரிழந்த ஊழியர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என ரஷ்யாவின் அரச ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதுவரை நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை என்பதுடன், வேறு எவருக்கும் கடுமையான நிமோனியா பாதிப்பும் கண்டறியப்படவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM