பியகம தேர்தல் தொகுதியில் அரசாங்கத்தின் 10 இலட்சம் ரூபா வீட்டு உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் மற்றொரு புதிய வீட்டின் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின் ஆரம்ப விழாவில் மின்சக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க கலந்துகொண்டார்.
மேலும், பியகம பிரதேச சபையின் உப தவிசாளர் சுகத் திஸாநாயக்க, தொகுதி உறுப்பினர்கள் மற்றும் வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
பியகம மேற்கு கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த சுஜானி தர்ஷனமாலி என்பவரே இந்த வீட்டு உதவித் திட்டத்தின் பயனாளியாவார். இவரது கணவர் வசந்த குமார் நாளாந்த கூலி வேலை செய்து ஐந்து பிள்ளைகளைக் கொண்ட தமது குடும்பத்தைப் பராமரித்து வருகின்றார்.
இதன்போது, பியகம கொட்டுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த ஹெட்டியாரச்சி மற்றும் திஸ்னா சந்தமாலி தம்பதியினர், வீடு கட்டுவதற்காகத் தமக்குச் சொந்தமான 6 பேர்ச் நிலத்தை நன்கொடையாக வழங்கியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதற்கான காணி உரிமப் பத்திரமும் இந்நிகழ்வில் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இந்த வருட இறுதிக்குள் பியகம தொகுதியில் அரசாங்கத்தின் 10 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் 45 வீடுகளின் பணிகளும் முழுமையாக நிறைவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், மேலும் பல வீடுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM