இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களுடைய இயல்பான வாழ்க்கையில் விவரிக்க இயலாத தடைகளையும், தாமதங்களையும் எதிர்கொண்டிருப்பார்கள். சிலவற்றை காலங்கள் பார்த்துக் கொள்ளும் என ஒதுக்கி வைத்து விடுவர். சிலவற்றை எம்மால் இயன்ற அளவிற்கு முயற்சி செய்து தடைகளையும், தாமதத்தையும் தகர்க்க தீர்மானிப்பர்.
ஆனால் வெகு சிலருக்கு மட்டும் எத்தகைய பரிகாரங்களை மேற்கொண்டாலும் தடையும், தாமதமும் தொடர்ந்து கொண்டிருக்கும். அவர்களது வாழ்வில் திருமண தடையை எதிர்கொண்டிருப்பார்கள். கண் திருஷ்டியை சந்தித்து இருப்பார்கள். தொழிலில் நஷ்டத்தையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கடன் சுமையால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இப்படி விவரிக்க அல்லது பகிர்ந்து கொள்ள இயலாத பல துன்பங்களுக்கு ஆளாகி இருந்தால்... அவர்கள் தங்களுடைய கஷ்டங்களில் இருந்து விடுதலை பெற எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில எளிய குறிப்புகளை வழங்கி உள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள் : ஆமணக்கு இலை, அகல் விளக்கு, விரலி மஞ்சள், மஞ்சள் தூள், மஞ்சள் வண்ண நூல், ஒரு ரூபாய் நாணயம், நல்லெண்ணெய் ,பஞ்சு திரி, பச்சை கற்பூரம்.
கிராமப்புறங்களில் கேட்பாரற்று சாலை ஓரங்களில் வளரும் ஆமணக்கு இலையை பறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் சற்று அகன்ற இலையை பறித்து செவ்வாய்க்கிழமை அன்று அதனை உங்களது வீட்டின் பூஜை அறையில் பித்தளை தட்டின் மீது வைத்து, அதன் மீது மண்ணாலான அகல் விளக்கில் நல்லெண்ணையையும் பஞ்சு திரியையும் வைத்து தீபம் ஏற்றி திருமணம் சார்ந்த முயற்சிகளில் எத்தகைய தடை இருந்தாலும் அகல வேண்டும் என பிரார்த்தனை செய்தால்... 48 நாட்களுக்குள் மனதிற்கு பிடித்த வரன் அமையும்.
பண வரவு தடையின்றி வரவேண்டும் என்றால்... வெள்ளிக்கிழமை அன்று ஆமணக்கு இலை ஒன்றில் ஒரு விரலி மஞ்சள், சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு பச்சை கற்பூரம் மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதை மஞ்சள் வண்ண நூலால் கட்டி உங்களுடைய பண பெட்டியில் வைத்து விடுங்கள். இதிலிருந்து வெளியாகும் சூட்சம ஆற்றல் மற்றும் வசிய ஆற்றல் தன வரவை உண்டாக்கும்.
வேறு சிலருக்கு தொழிலில் திடீரென்று நஷ்டம் ஏற்படக்கூடும். இவர்கள் சனிக்கிழமை அல்லது அமாவாசை நாளில் ஒரு ஆமணக்கு இலையை எடுத்து அதில் சிறிதளவு கல் உப்பு, சிறிதளவு மிளகு, ஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வைத்து.. யார் தொழில் நடத்துகிறார்களோ..! அவர்களை கிழக்கும் முகமாக நிற்க வைத்து, இந்த ஆமணக்கு இலையை தலையை சுற்றி மூன்று சுற்று இடமிருந்து வலமாகவும்... மூன்று சுற்று வலமிருந்து இடமாகவும் ... சுற்றி யாரும் கால் படாத இடத்தில் வீசி எறிந்து விடுங்கள். இவை உங்களுக்கு சூட்சமமாக இருக்கும் கண் திருஷ்டியை நீக்குவதுடன் கடன் தொல்லையிலிருந்தும் நீங்குவதற்கான வழிகளை புலப்படுத்தும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM