களுத்துறை நாகொடவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (9) இரவு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து வாழைச்சேனை சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று இரவு 10 மணியளவில் கதுருவெலவில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பயணிகள் பஸ் வண்டி ஒன்றை வாழைச்சேனை நாவலடிப் பகுதியில் நிறுத்தி சோதனையிட்டனர்.
இதன்போது ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
இவர் கடந்த 16.01.2023 அன்று 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி, மகசீன், 3 தோட்டாக்கள், எஸ்.எப்.ஜி. 87 ரக கைக்குண்டு ஆகியவற்றுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரை விசேட அதிரடிப்படையினர் தங்களிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM