உலக மனநல தினம் இன்று

Published By: Digital Desk 1

10 Oct, 2026 | 04:59 PM
image

உலக மனநல தினம் (World Mental Health Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் மனநலம் குறித்த களங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தல் இதன்  நோக்கமாகும்.

உலக மனநல கூட்டமைப்பால் இந்த ஆண்டின் அதிகாரப்பூர்வக் கருப்பொருள், "Lived experiences Heard: Real voices, Real change (வாழ்வியல் அனுபவங்களைக் கேட்போம்: உண்மையான குரல்கள், உண்மையான மாற்றங்கள்) என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் பல்வேறு வகையான மனநலச் சிக்கல்களாலும், குறிப்பாக பதற்றம் மற்றும்  மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளாலும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களில் மிகக் குறைவான சதவீதத்தினரே முறையான சிகிச்சைகளைப் பெறுகின்றனர். மனநலப் பிரச்சனைகளைச் சமூகத்தில் உள்ள அச்சம் மற்றும் களங்கம் காரணமாக பலர் வெளியில் சொல்லத் தயங்குவதே இதற்குக் முக்கியக் காரணமாகும்.

வாழ்வின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் பிரச்சனை என்பது வந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், அதை நினைத்து கொண்டு இருப்பது ஆழ்மனதில் ஒரு வகையான பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமைகிறது.

நம் வாழ்வின் நேர்மறையான கூறுகளில் கவனம் செலுத்தினால், இத்தகைய அசாதாரண நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுக்கலாம். நேர்மறையாக இருக்க முயற்சி செய்வோம், எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருப்போம், மாற்றங்கள் வரும்போது அவற்றை ஏற்றுக்கொள்ள நம்மையே தயார் செய்து  கொள்வோம்

 மனநோய் என்பது ஒருவரது பலவீனம் அல்ல. அது உடலுக்கு வரும் நோய் போன்றதே.இந்த புரிதல் சமூகத்தில் ஏற்படும் போது மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி சிகிச்சை பெற்று தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் 

மனநலமும் உடல்நலத்தைப் போலவே முக்கியமானதுதான். மனநல மருத்துவரை பார்க்கப் போவது என்றால் அதை வெளியில் சொல்லவே கூச்சப்பட்ட காலகட்டமும் இருந்தது. ஆனால், முன்பு அளவுக்கு இப்போது இல்லை. மனநலமும் முக்கியம் என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். இதன் வாயிலாகவே வலிமையான சமூகத்தை உருவாக்க முடியும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூக்கடைப்பு பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை-...

2026-11-14 15:45:24
news-image

இரத்த நாள அடைப்பை நீக்கும் நவீன...

2026-11-13 15:26:37
news-image

பிட்யூற்றரி மேக்ரோஅடினோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய...

2026-11-12 15:10:08
news-image

பெல்விக் அசிடபுலர் ஃப்ராக்சர் எனும் இடுப்பு...

2026-11-11 16:42:12
news-image

ஸ்போண்டிலோஸிஸ்டெசிஸ் எனும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும்...

2026-11-10 15:59:08
news-image

நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-11-07 16:35:21
news-image

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனும் இதய தசை...

2026-11-06 18:17:18
news-image

பித்தப்பை சுவர் சிதைவு நோய் பாதிப்பிற்கான...

2026-11-05 16:52:08
news-image

அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

2026-11-04 14:01:10
news-image

கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை...

2026-11-03 14:47:47
news-image

வாஸ்குலர் ரிங் எனும் பிறவி இதயக்...

2026-11-02 13:47:27
news-image

கான்ட்ராஸ்ட் இன்டீயூஸ்டு கிட்னி இன்ஜுரி எனும்...

2026-10-31 14:40:04