நடிகர்கள் சரண் - ஜே டி சக்கரவர்த்தி ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'தங்கம் தங்கம்' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் த. சமய முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்' திரைப்படத்தில் சரண் , ஜே. டி சக்கரவர்த்தி, லால், ஸ்மீகா, ராதிகா சரத்குமார், சாதிக், காளி வெங்கட், பாலசரவணன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கா. வின். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் டேனியல் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ராம் பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'தங்கம் தங்கம் நான் சொக்க தங்கம் கொஞ்சம் உரசி பார்த்தா தெரியும் சொர்க்கம்..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் த. சமயமுரளி எழுத, பின்னணி பாடகி நித்யா ஸ்ரீ கிருஷ்ணன் பாடியிருக்கிறார். வணிக அம்சமுள்ள திரைப்படங்களில் இடம்பெறும் கவர்ச்சி பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடலும்.. பாடலுக்கான இசையும்.. ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM