தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான நவீன் முரளிதர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காட்டேஜ்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'நான் ராட்சசன்' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் - நந்தினி விஸ்வநாதன் ஆகியோரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'காட்டேஜ்' திரைப்படத்தில் நவீன் முரளிதர் 'அரியா செல்வராஜ் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சதீஷ் கீதா குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு செந்தமிழ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எவாலுவேஷன் என்டர்டெய்ன்மென்ட் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. எஸ் கியூப் ஸ்டுடியோஸ் மற்றும் ப்ளூபெர்ரி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணை தயாரிப்பில் பொறுப்பேற்று இருக்கிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ' அரக்கன் பாயும் நேரம் தான் அலறும் மொத்த காடும்டா சிதறி நீயும் ஓடுடா..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கு. கார்த்திக் எழுத, பின்னணி பாடகர் சின்னு செந்தமிழன் பாடியிருக்கிறார். காடுகளில் நடைபெறும் இயற்கை பேரிடர் தொடர்பான எச்சரிக்கையை விவரிக்கும் இந்த பாடலும், பாடலுக்கான மெட்டும் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM