மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதிய சொகுசு பேருந்து - ஓட்டுநர் கைது!

10 Oct, 2026 | 05:06 PM
image

கெஸ்பேவ - கொழும்பு வீதியின் மிரிஸ்வத்த பகுதியில், மெட்ரோ பேருந்து ஒன்றுடன் திட்டமிட்டு மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய பேருந்து சாரதி ஒருவர் பிலியந்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை - கொழும்பு வீதியில் பயணித்த சொகுசு பேருந்தின் ஓட்டுநரான சந்தேக நபர், கஹதுடுவாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மெட்ரோ பேருந்தின் முன்பக்க வலது மூலையில் மோதி இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதலில் மெட்ரோ பேருந்தின் வலது பக்கக் கண்ணாடி மற்றும் அதற்குக் கீழே உள்ள ஜன்னல் கண்ணாடி என்பன சேதமடைந்துள்ளதுடன், இதனால் சுமார் 3,42,000 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஹொரணை, பொகுனுவிட்ட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ்  இன்று சனிக்கிழமை (10) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழல் குற்றச்சாட்டுகள், 323 கொள்கலன் விவகாரம்...

2026-11-14 17:15:21
news-image

80,000க்கும் அதிகமான வேலையில்லாப் பட்டதாரிகள் வீதியில்...

2026-11-14 16:46:43
news-image

வெளிநாட்டுப் பயங்கரவாதி போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம்...

2026-11-14 16:46:26
news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03