சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது தொடர் தாக்குதல்கள் - இலங்கை கண்டனம்

10 Oct, 2026 | 03:03 PM
image

சவூதி அரேபியாவில் உள்ள சிவில் விமான நிலையங்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல்களில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தித்துள்ளது.

அத்துடன், இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்குமான தனது ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளது. 

மேலும், பதற்றத்தைத் தணிப்பதற்காக அனைத்துத் தரப்பினரும் அதிகபட்ச சுயக்கட்டுப்பாட்டைப் பேணி, ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, அமெரிக்கா - ஈரான் மோதலால் தீவிரமடைந்துள்ள போரின் ஒரு பகுதியாக, யேமனின் ஹவுதி அமைப்பு சவூதி அரேபியா மீதான ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை ரியாத் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூவர் உயிரிழந்ததாக சவூதி அதிகாரபூர்வத் தகவல்கள் நேற்று வெள்ளிக்கிழமை (9) தெரிவிக்கப்பட்டன.

பலரைக் காயப்படுத்தியதுடன், 'சவூதியா ஏர்லைன்ஸ்' (Saudia Airlines) விமானம் ஒன்றையும் சேதப்படுத்தி, விமான நிலையப் பகுதியில் புகை மண்டலத்தை உருவாக்கிய இத்தாக்குதல்கள் காரணமாக, உலகளாவிய எண்ணெய்த் துறை தலைவர்களின் முக்கிய கூட்டம் நடைபெற சில நாட்களே இருந்த நிலையில், பல விமான நிறுவனங்கள் சவூதி தலைநகருக்கான தமது விமான சேவைகளை ரத்து செய்தன.

யேமனின் ஹவுதி அமைப்பு, வியாழக்கிழமை (8) இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இந்த விமான நிலையத்தைத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03
news-image

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வால்...

2026-11-14 16:21:41
news-image

சட்டவிரோத கடற்றொழில் ஊடாகவே 300 மில்லியன்...

2026-11-14 15:49:51
news-image

மூச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாத...

2026-11-14 15:16:51
news-image

கடற்றொழில் மற்றும் கடல்சார் பொறியியல் துறை...

2026-11-14 15:06:10