2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார மைல்கற்களைக் கொண்டாடத் தயாராகி வரும் இலங்கையும் சீனாவும்

Published By: Digital Desk 1

10 Oct, 2026 | 02:54 PM
image

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்  விஜித ஹேரத், இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்கை சந்தித்து, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் 2027ஆம் ஆண்டில் இலங்கை - சீனா இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவு மற்றும் ரப்பர் - அரிசி ஒப்பந்தத்தின் 75வது ஆண்டு நிறைவு ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கான ஆயத்தங்கள் குறித்து இன்று சனிக்கிழமை (10) கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கு ஒரு முக்கியமான அடித்தளமிட்ட ரப்பர் - அரிசி ஒப்பந்தத்தின் 75வது ஆண்டு நிறைவு ஆகிய இரு முக்கிய நிகழ்வுகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை அங்கீகரிப்பதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்குமான ஒரு முக்கிய வாய்ப்பாக இந்த ஆண்டு நிறைவு நிகழ்வுகள் அமையும் என இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03
news-image

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வால்...

2026-11-14 16:21:41
news-image

சட்டவிரோத கடற்றொழில் ஊடாகவே 300 மில்லியன்...

2026-11-14 15:49:51
news-image

மூச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாத...

2026-11-14 15:16:51
news-image

கடற்றொழில் மற்றும் கடல்சார் பொறியியல் துறை...

2026-11-14 15:06:10
news-image

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-11-14 16:10:37