இன்று மகாளய அமாவாசை

Published By: Digital Desk 1

10 Oct, 2026 | 01:34 PM
image

அமாவாசை என்பது ஆன்மிகத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த புனித நாளாக கருதப்படுகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான மகாளய அமாவாசை ஒக்டோபர் இன்று சனிக்கிழமை 10, கடைபிடிக்கப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே 'மகாளய அமாவாசை' என்று அழைக்கப்படுகிறது.

புரட்டாசி பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி, அமாவாசை வரை உள்ள 15 அல்லது 16 நாட்கள் மகாளய பட்சம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மகாளய பட்சத்தின் நிறைவாக வரும் மகாளய அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கும் மிக முக்கியமான நாளாகும்.

மகாளய பட்சத்தின் நிறைவாக வரும் மகாளய அமாவாசையானது  'பித்ரு அமாவாசை' என்றும், 'சர்வ பித்ரு அமாவாசை' என்றும், 'பித்ரு மோட்ச அமாவாசை என்றும் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.

உலகளாவிய இந்துக்கள்  முன்னோர்களுக்கு  படத்திற்கு முன்பு  பகல் வேளையில் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு சமைத்து இலை போட்டு, படையல் போடுவது வழக்கமான  விடயமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

மகாளய பட்சத்தின் அனைத்து நாட்களும் சிலர் தர்ப்பணம், சிரார்த்தம், தானம் ஆகியவை கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். 

 மகாளய பட்சத்தின் அனைத்து நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக தர்ப்பணம் உள்ளிட்ட சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

மகாளய பட்சம் மற்றும் அதன் நிறைவாக வரும் மகாளய அமாவாசை நாளில் நம்முடைய முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக வந்து நாம் அளிக்கும் தர்ப்பணம், தானங்களை ஏற்று, நமக்கு ஆசி வழங்குவதாக நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. 

முன்னோர்களுக்குப் பிண்டங்கள் (வேகவைத்த அரிசி மற்றும் எள் உருண்டைகள்) செய்து  படைக்கின்றதோடு  பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, எள் கலந்த பச்சரிசி வழங்குவது   பித்ரு தோஷம் நீங்குவதற்கும், முன்னோர்களின் ஆசி பெறுவதற்கும் செய்யப்படும் ஒரு முக்கியமான பரிகாரமாக நோக்கப்படுகிறது.

உலகளாவிய இந்துக்கள்  மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கவும், சிறப்பு வழிபாடுகள் செய்யவும் பக்தர்கள் பல்வேறு புனிதத் தலங்கள் மற்றும் கோயில்களுக்குச் சென்று இந்நாளை சிறப்பித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஜயதசமியன்று முக்தியடைந்த ஷீர்டி சாயி பாபா!

2026-10-18 14:29:02
news-image

"நாளை போவேன்" : வைராக்கியமும் சிதம்பர...

2026-10-14 17:53:04
news-image

அதானி சீமேந்து நிறுவனத்தின் வியக்கவைக்கும் துர்கா...

2026-10-12 16:32:57
news-image

இன்று மகாளய அமாவாசை

2026-10-10 13:34:02
news-image

காரைநகரில் சிறப்பாக நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழா

2026-09-23 17:24:25
news-image

கொட்டும் மழையில் கொட்டகலை வாவியில் 17...

2026-09-21 15:49:12
news-image

17 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை மீனாட்சி...

2026-09-17 11:47:34
news-image

12,000 வலம்புரி சங்குகள் முதல் மணல்...

2026-09-14 15:43:34
news-image

பம்பலப்பிட்டிய சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர்...

2026-09-08 10:11:49
news-image

இசையும் நடனமும் சங்கமித்த "வானவில்" :...

2026-08-31 15:33:32
news-image

முன்னோர்கள் ஆசிர்வதிக்கும் ஆடி அமாவாசை விரதம்

2026-08-12 12:15:37
news-image

கொழும்பு வீதியில் வெற்றிவேல் தரிசனம்! ;...

2026-07-29 11:32:12