சவூதி - ரியாத்திற்கான விமானச் சேவைகளை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Published By: Digital Desk 1

10 Oct, 2026 | 01:05 PM
image

சவூதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ரியாத்துக்கான அனைத்து விமானச் சேவைகளையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடுகளும் செயல்பாட்டு ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வலியுறுத்தியுள்ளது.

வணிக விமானச் சேவைகளை முன்னெடுப்பதற்குப் பொருத்தமான சூழ்நிலை குறித்து மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே ரியாத்துக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விமான சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பயணிகள் பின்வரும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்:

இலங்கைக்குள்: 1979

சர்வதேச அழைப்புகளுக்கு: +94 11 777 1979

WhatsApp:+94 74 444 1979 

தமது பயண முகவரைத் தொடர்புகொள்ளலாம் அல்லது www.srilankan.com  https://www.srilankan.com என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

ரியாத்துக்குப் பயணிக்கவுள்ள அல்லது ரியாத்திலிருந்து பயணிக்கவுள்ள பயணிகள், தமது விமானப் பயணங்கள் தொடர்பான சமீபத்திய தகவல்களை விமான நிறுவனம் அல்லது பயண முகவர் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்...

2026-11-08 14:59:26
news-image

கொழும்பின் வடிகால் கட்டமைப்புகளால் 30 முதல் ...

2026-11-08 14:44:15
news-image

இலங்கையின் முதலீட்டு நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது -...

2026-11-08 14:25:58
news-image

கொழும்பு வெள்ளம் மாநகர சபையின் பொறுப்பற்ற...

2026-11-08 13:56:56
news-image

தேர்தல் முறைமை தெரிவுக்குழுவை புறக்கணித்த வடக்கு ...

2026-11-08 13:29:02
news-image

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு...

2026-11-08 13:25:06
news-image

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்திற்கு சர்வதேச...

2026-11-08 13:21:47
news-image

உலக வர்த்தகத்தின் இதயத்துடிப்பு இந்தியப் பெருங்கடல்...

2026-11-08 13:18:47
news-image

கொழும்பு நீர்வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டும் -...

2026-11-08 13:14:32
news-image

கொழும்பு வெள்ளப் பாதிப்புகளுக்குத் தீர்வு கண்டு...

2026-11-08 13:04:19
news-image

அஸ்வெசும : நவ. 11 வரை...

2026-11-08 11:54:56
news-image

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 

2026-11-08 12:13:28