பு.கஜிந்தன்
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (9) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீண்ட காலமாக கொழும்புத்துறை பகுதியில் இருந்து எடுத்து வரும் மணலை அரியாலை பகுதியில் தேக்கி வைத்து, அங்கிருந்து விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.ஏ.ஜெயமாலின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் மணலுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 3 டிப்பர் வாகனங்களும் மணலும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை நடத்திய பின்னர், அவரை யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் எடுத்து வருகின்றனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM