கொழும்பு துறைமுக நகரில் இந்தியாவுக்கும் இடமுண்டு.!

Published By: Robert

26 Oct, 2017 | 08:56 AM
image

இலங்­கையின் ஒரு தனி அல­கா­கவே கொழும்பு சர்­வ­தேச நிதி நகர் (போர்ட் சிட்டி) அமைக்­கப்­பட்டு வரு­கின்­றது. 2040 ஆம் ஆண்டில் இது பூர­ணத்து வமடையும். இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் நிதி நகரில் இடம் உண்டு என  அர­சாங்கம்  அறி­வித்­துள்­ளது. 

கொழும்பு சர்­வ­தேச நிதி நகரின் எல்லை நிரைப்பு பணி­களின்  50 வீதம் நிறை­வு­பெற்­றுள்­ளது, எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டின் நடுப்­ப­கு­தியில் மண் நிரைப்பு பணிகள் முடிவு பெரும் என அர­சாங்கம் கூறி­யுள்­ளது. 

 மேல்­மா­காண மற்றும் பாரிய நகர அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க நேற்று நிதி நகரை  பார்­வை­யிட  சென்­ற­துடன் ஊடக சந்­திப்­பொன்­றையும் அங்கு நடத்­தி­யி­ருந்தார். இதன்­போது அவர் குறிப்­பி­டு­கை­யி­லேயே  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் 

கொழும்பு துறை­முக நகரை உரு­வாக்க முற்­பட்­ட­போது  பல்­வேறு பிரச்­சி­னைகள் எழுந்­தன. இயற்கை பிரச்­சி­னைகள், எல்லை பிரச்­சி­னைகள் என பல்­வேறு சிக்­கல்கள் காணப்­பட்ட நிலையில் அவை அனைத்­திற்கும் தீர்வு காண்டு இந்த திட்­டத்­தினை உரு­வாக்கி வரு­கின்றோம். இப்­போதும் சில பிரச்­சி­னைகள் உள்­ளன. அவற்றை இனங்­கண்டு தீர்­வு­களை வழங்கி வரு­கின்றோம். இன்று நகர் அபி­வி­ருத்­தி­களின் அடிப்­ப­டையில் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­பட்டு வரு­கின்­றன. இன்று சிங்­கப்பூர், கொங்கொங், துபாய் ஆகிய நாடு­களை எடுத்­துக்­கொண்டால் அவற்றின் வெற்­றிக்கும் இவ்­வா­றான  திட்­டங்­களே கார­ண­மாகும். அத்­துடன் கொழும்பு துறை­முகம் நிதி நகரை அண்­மித்து  அமைந்­துள்ள கார­ணத்­தினால் துறை­முக அபி­வி­ருத்­தி­யினை மேலும் பலப்­ப­டுத்­தவும் இது பாரிய வாய்ப்­பாக அமையும். அத்­துடன் நிலக்கீழ் பாதைகள் மற்றும் மேம்­பா­லங்கள் ஆகி­ய­வற்றை அமைக்கும் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. கொழும்பு, கொள்­ளுப்­பிட்டி, துறை­முக நகர் பகு­தி­களை இணைத்த புகை­யி­ரத  சேவை­களும் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன. இதனால் வாகன நெரி­ச­லையும்  குறைக்க முடியும். மேலும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுக்க தயா­ராக உள்ளோம். கொழும்­பினை இணைக்கும் வேலைத்­திட்­ட­மா­கவே நாம் இதனைக் கரு­து­கின்றோம். 

இந்த துறை­முக நகர் உரு­வாக்­கத்தின் போது நீர், மின்­சாரம் வழங்கும் நட­வ­டி­கை­க­ளையும் இலங்கை அர­சாங்கம் மற்றும் சீன நிறு­வனம் இணைந்து முன்­னெ­டுக்­க­வுள்­ளன. குப்பை அகற்றும் திட்­டங்­களும் இதில் உள்­ள­டங்­கு­கின்­றது. நகரின் குப்­பை­களை கொழும்பில் சேர்க்­கப்­போ­வ­தில்லை. இப்­போது வரையில் நகர் உரு­வாக்­கத்தின் 50 வீத­மான வேலைத்­திட்­டங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன. ஆரம்­பத்தில் இது குத்­தகை அடிப்­ப­டையில் 99 ஆண்­டு­க­ளுக்கு கொடுக்­கப்­பட்ட போதிலும் பின்னர் இலங்­கையே முழு­மை­யான உரி­மை­யினை பெரும். 

இப்­போதும் கொழும்பு துறை­முக நக­ரா­னது கொழும்பின் ஒரு பகு­தி­யா­கவே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அடுத்த ஆண்டு இலங்­கையின் புதிய வரை­படம் வெளி­யி­டப்­படும் அதில் இதனை அவ­தா­னிக்க முடியும். கடல் பரப்பில் 269 ஏக்கர் நிலப்­ப­ரப்­பினை நிரப்பி அதில் இந்த நகரை உரு­வாக்­கி­வ­ரு­கின்றோம். இதில் சீன நிறு­வனம் ஒன்றே பிர­தான நட­வ­டிக்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அத்­துடன் இணைந்து இலங்கை அர­சாங்­கமும் ஒரு பகு­தி­யினை அபி­வி­ருத்தி செய்து வரு­கின்­றது. இந்த வேலைத்­திட்­டங்கள் நிறை­வுக்கு வந்­த­வுடன் ஜனா­தி­பதி   இந்த துறை­முக நகரை ஒரு சிறப்பு நக­ராக அறி­விப்பார். இப்­போதும் அவ­ரது கட்­டுப்­பாட்டின் கீழேயே இந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அடுத்த இரண்டு ஆண்­டு­களில் இதற்­கான ஆரம்­பக்­கட்ட நிலங்­களை உரு­வாக்கும் வேலை­களை பூர்த்­தி­செய்ய முடியும்.  

நிலங்­களை நிறு­வ­னங்­க­ளுக்கு கொடுக்கும் வகையில் தற்­கா­லிக நிறு­வனம் ஒன்று இலங்­கையில் அமைக்­கப்­படும். அவர்கள் சீன நிறு­வ­னங்­க­ளுக்­கான அனு­ம­தி­களை வழங்­குவர். அதேபோல் இலங்கை  நிறு­வ­னங்­களும் இதில் கட்­டி­டங்­களை அமைக்க முடியும். இந்திய நிறுவனங்களுக்கும் அனுமதி உண்டு. நாம் யாரையும் பகைத்துக்கொண்டு இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை. இந்த துறைமுக நகருடன் இணைந்த இலங்கையின் கரையோர அபிவிருத்தி திட்டங்களையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக கொழும்பில் இருந்து திருகோணமலை வரையில் கரையோர அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19