சென்னை பெசன்ட் நகரில் அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் தூக்கிச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றினர்.
இந்தியாவில் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் இந்தத் திருத்தப் பணியின்போது பல இலட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் உரிய நடைமுறைகளுக்கு உட்பட்டே முன்னெடுக்கப்படுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
எனினும், தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், ஏனைய இரு தேர்தல் ஆணையாளர்களின் ஆலோசனைகளைக் கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், அவர் பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் காந்தி ஜெயந்தியன்று ஆம் ஆத்மி கட்சி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.
அதேபோன்று, மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் சிவாஜி பூங்காவிலும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, அகில இந்திய மாணவர் சங்கமும் கடந்த 3ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை பெசன்ட் நகர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு முன் அனுமதி பெறப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.
எனினும், பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாததால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். அவர்கள் வீதியில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன்போது, “நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது , நாங்களே உங்களைத் தேர்ந்தெடுக்கிறோம்”, “13 கோடி வாக்காளர்கள் நீக்கம்”, “சிஸ்டம் சரியில்லை” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் கைது செய்து, தூக்கிச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றினர். சம்பவ இடத்தில் மேலதிக பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM