லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத் அரைச் சதங்கள் வீணடித்தன; பாகிஸ்தான் 4 விக்கெட்களால் வெற்றி

Published By: Vishnu

09 Oct, 2026 | 11:32 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற  முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.

ஆரம்ப வீரர் லஹிரு உதார அபாரமாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்து இலங்கை அணியை நல்ல நிலையில் இட்டார்.

ஆனால், பாகிஸ்தான் அணித் தலைவர் சஹிப்ஸதா பர்ஹான், மாஸ் சதாகத் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் லஹிரு உதாரவின் அரைச் சதத்தை வீணடித்ததுடன் பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய லஹிரு குமார 55 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 91 ஓட்டங்களைப் பெற்றார்.

 

அவர் கமிந்து மெண்டிஸுடன் 3ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களையும் தசுன் ஷானக்கவுடன் 5ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

கமிந்து மெண்டிஸ் 23 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கைக்கு 18 வைட்கள் உட்பட 29 ஓட்டங்கள் உதிரிகளாக கிடைத்தது.

பந்துவீச்சில் நசீம் ஷா 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் இம்ரான் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 7 பந்துகள் மீதம் இருக்க 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

சஹிப்ஸதா பர்ஹான் ஆரம்ப விக்கெட்டில் பக்கார் ஸமானுடன் 54 ஓட்டங்களையும் இரண்டாவது விக்கெட்டில் மாஸ் ஸதாகத்துடன் 92 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியின்  வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

சஹிப்ஸதா பர்ஹான் 53 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களையும் மாஸ் சதாகத் 29 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பக்கார் ஸமான் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஏஷான் மாலிங்க 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சஹப்ஸதா பர்ஹான் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா - பூட்டான், பங்களாதேஷ் -...

2026-11-14 11:47:31
news-image

இந்தியாவை துவம்சம் செய்து  இரண்டாவது   மிகப்...

2026-11-14 06:39:43
news-image

மகளிர் முன்னேறிவரும் நாடுகள் கிரிக்கெட: ஸ்கொட்லாந்தை...

2026-11-14 04:23:55
news-image

இலங்கையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெஸ்ட் போட்டியை...

2026-11-14 04:20:49
news-image

பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல்,...

2026-11-12 16:45:31
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான  முதலாவது   டெஸ்ட் போட்டியில்...

2026-11-12 04:30:02
news-image

இங்கிலாந்திலிருந்து அழைக்கப்பட்ட ஹம்சா, பர்ஹான் ஆகியோர்...

2026-11-12 04:17:39
news-image

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி ;...

2026-11-11 16:08:40
news-image

நாங்கள் விளையாடுவது கால்பந்தாட்டம், கிரிக்கெட் அல்ல,...

2026-11-11 11:37:01
news-image

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்...

2026-11-11 06:24:07
news-image

அறிமுக வீரர்கள் மூவர் குவித்த அரைச்...

2026-11-10 19:32:54
news-image

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான...

2026-11-10 00:21:02