ரியாத் விமான நிலையத் தாக்குதலில் விமானி உயிரிழப்பு 

Published By: Digital Desk 2

09 Oct, 2026 | 05:36 PM
image

ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (08) புதன்கிழமை இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில், சவூதி அரேபியாவின் தேசிய விமானச் சேவையான சவூதியா நிறுவனத்தின் சிரேஷ்ட விமானி ஹமூத் அலி அல்கல்தமி உயிரிழந்துள்ளதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் 03 சவூதி பிரஜைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகச் சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரியாத் சர்வதேச விமான நிலையத்தைக் இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

விமான நிலைய உட்கட்டமைப்பு பகுதிகள் மீது ஒரு தாக்குதலும், முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சவூதி பயணிகள் விமானம் மீது மற்றொரு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

தாக்குதலுக்கு இலக்கான விமானத்தில் தீப்பற்றி எரிந்ததில் அது கடும் சேதமடைந்தது. எனினும், இந்த சம்பவத்தின் போது விமானத்திற்குள் பயணிகள் எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரக் கால மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து, நேற்றைய தினம்  மாலை 6.00 மணி முதல் ரியாத் விமான நிலையத்தின் வான்வழிப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகச் சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜப்பானில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி 

2026-11-08 11:51:47
news-image

இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்? -...

2026-11-08 10:34:39
news-image

இடைத்தேர்தலுக்குப் பின் ஈரான் மீது அமெரிக்கா...

2026-11-07 15:01:16
news-image

மெலனியா ட்ரம்புக்கு உயரிய விருது வழங்கி...

2026-11-07 10:56:17
news-image

2027ஆம் ஆண்டுக்குள் 2 இலட்சம் தற்காலிகக்...

2026-11-07 10:27:51
news-image

குத்துவிளக்கேற்றிய டிரம்ப்! வெள்ளை மாளிகையில் களைகட்டிய...

2026-11-07 10:16:26
news-image

இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்? ; ...

2026-11-07 10:04:59
news-image

பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய...

2026-11-06 17:54:18
news-image

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் –...

2026-11-06 16:05:27
news-image

என்னை பதவி நீக்கம் செய்தால் ஜனநாயகக்...

2026-11-06 12:31:44
news-image

நியூசிலாந்து கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை...

2026-11-06 12:15:09
news-image

இந்தோனேசியாவில் பாதுகாப்பு மற்றும் உயர்மட்டத் தலைவர்களின்...

2026-11-05 11:55:35