E 1 - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

09 Oct, 2026 | 03:17 PM
image

தயாரிப்பு : கப்புள் கிரியேஷன்ஸ்

நடிகர்கள் : சதா நாடார், மோனிகா செலீனா, சுந்தரம், பாண்டி, பேபி ஷிவ் மற்றும் பலர்

இயக்கம் : சதா நாடார் - மோனிகா செலீனா

மதிப்பீடு : 2/ 5

குறைந்த முதலீட்டில் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்கு 'குட் டச்', 'பேட் டச்', 'டோன்ட் டச்' பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாராகி இருக்கும் 'E 1 'திரைப்படம் - ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

சிறிய நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்று அமைந்துள்ளது. அதில் E 1 எனும் குடியிருப்பில் கதை சம்பவம் நிகழ்கிறது. அந்தக் குடியிருப்பில் பச்சிளம் குழந்தையுடன் பெண்மணி ஒருவர் தனிமையில் இருக்கிறார்.

அந்த வீட்டின் இரவு நேரத்தில் கணவருடன் கைபேசி மூலமாக உரையாடிக் கொண்டிருக்கும் தருணத்தில்... வித்தியாசமான ஒலியைக் கேட்டு வரவேற்பறை பகுதிக்கு வருகிறார். அங்கு ஒரு பிணத்துடன் ஒரு முகமூடி அணிந்த மனிதன் நிற்பதை கண்டு அந்தப் பெண்மணி அச்சமடைகிறார்.

முகத்தை மூடியுள்ள மனிதன் சிறிது நேரத்தில் முகத்தை காண்பித்து, 'நான் பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்த மனித மிருகத்தை கொன்று விட்டேன். நான் பொழுது விடிவதற்குள் எங்கிருந்து தப்பித்து விடுவேன். அதுவரை அமைதியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என எச்சரிக்கிறான்.

கணவன் இல்லாத தருணத்தில் அன்னியர் ஒருவருடனும், ஒரு சடலத்துடனும், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்மணி எம்மாதிரியான சவால்களை எதிர்கொண்டார்? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

படம் முழுவதும் திரில்லர் அம்சங்கள் இருந்தாலும் குறைந்த முதலீட்டில் தயாரான படைப்பு என்பது உருவாக்கத்திலும், திரை மொழியிலும் அப்பட்டமாக தெரிகிறது.

இருப்பினும் பெண் பிள்ளை பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை சற்று பிரச்சாரத் த்வொனியுடன் இயக்குநர்கள் கூறியிருப்பதற்காக ஆதரிக்கலாம்.

அன்னியன் ஒருவன் வீட்டிற்குள் அதுவும் இரவு நேரத்தில் வருகை தந்தால்... அதுவும் ஒரு சடலத்துடன் இருந்தால்... அந்த பெண்மணிக்கு எப்படி உறக்கம் வரும்? என்ற அடிப்படையான வினாவை கதாசிரியர் எழுப்பியிருந்தால்...! திரைக்கதை இன்னும் செழுமையாக இருந்திருக்கும்.

உச்சகட்ட காட்சியில் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கதாபாத்திரம் - தொடர்ந்து வன்முறையில் பயணிப்பேன் என சொல்வதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

கதையின் நாயகன் குமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சதா நாடார் - அவருடைய நண்பர் பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டி- கதையின் நாயகியாக கை குழந்தையின் தாயாக நடித்திருக்கும் 'இன்ஸ்டா' புகழ் மோனிகா செலீனா-  ஆகியோர் கதைக்குள் பயணித்து அளவான நடிப்பை வழங்கியுள்ளனர்.

எம். எஸ். மனோ குமாரின் ஒளிப்பதிவை விட, E. J. ஜான்சனின் பின்னணி இசை சிறப்பு.

E 1 - மறக்க முடியாத இரவு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பொலிமேரா...

2026-11-10 16:28:21
news-image

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை...

2026-11-10 16:27:29
news-image

அறிமுக நடிகர் தீரன் நடிக்கும் 'வோல்டேஜ்'...

2026-11-10 16:27:07
news-image

நடிகர் நாகார்ஜூனாவின் 'கிங் 100' படத்தில்...

2026-11-10 16:26:34
news-image

விஜய் அண்டனியின் 'அப்பா குட்டி '...

2026-11-10 15:59:28
news-image

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி...

2026-11-09 16:34:53