இந்­திய - அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்கு இடை­யி­லான 3ஆவது மற்றும் கடைசி இரு­ப­துக்கு 20 போட்­டியில் 7 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் இந்­தியா வெற்­றி­பெற்­றது. ஏற்­க­னவே தொடரை வென்­றி­ருந்த இந்­தியா மூன்று போட்­டி­க­ளையும் வெற்­றி­கொண்டு அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வெள்ளைய­டித்­தது.

சிட்­னியில் நடை­பெற்ற நேற்­றைய போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற அவுஸ்­தி­ரே­லியா முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. அதன்­படி கள­மி­றங்­கிய அவுஸ்­தி­ரே­லிய அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 197 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. இதில் வொட்சன் அபா­ர­மாக விளை­யாடி சதம் அடித்தார். இவ­ரது அதி­ர­டியால் அவுஸ்­தி­ரே­லி­யாவின் ஓட்ட வேகம் ஓவ­ருக்கு சரா­ச­ரி­யாக 10 ஓட்­டங்­க­ளாக உயர்ந்­தது. வொட்சன் கடைசி வரை ஆட்­ட­மி­ழக்­காமல் 10 பவுண்­ட­ரிகள் மற்றும் 6 சிக்­ஸர்­களுடன் 124 ஓட்­டங்­களைப் பெற்றார்.

198 என்ற வெற்றி இலக்கை நோக்கி கள­மி­றங்­கிய இந்­திய அணி 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் வெற்றி ஓட்­டத்தைப் பெற்று ஆஸி.க்கு அதிர்ச்­சி­ய­ளித்­தது. இந்­தி­யாவின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக ஷர்மா மற்றும் தவான் ஆகியோர் கள­மி­றங்­கினர். இதில் ஷர்மா (52), தவான்(26), கோஹ்லி (50) என ஓட்­டங்­களைக் குவித்­தனர். இறுதி வரை களத்தில் நின்ற ரெய்னா மற்றும் யுவராஜ் சிங்க ஆகியோர் அணிக்கு வெற்­றியைத் தேடித் தந்­தனர். இந்­திய அணி மூன்று விக்­கெட்­டுக்­களை மாத்திம் இழந்து 20 ஓவர்களையும் விளையாடி 200 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதில் ரெய்னா 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.