இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களுடைய சூழலுக்கு ஏற்ற வகையில், அதனை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான வழிகாட்டியாக சோதிடத்தை பார்க்கின்றனர். உண்மையில் ஒவ்வொரு வயதிற்கும் ஒவ்வொரு கிரகங்கள் தங்களின் ஆதிக்கத்தை ஜாதகருக்கு செலுத்தும்.
இந்த சூட்சுமத்தை உணர்ந்து விட்டால்.. அதாவது உங்களின் வயது என்னவோ, அதற்குரிய கிரகம் என்னவோ, அதனை மட்டுமே நீங்கள் உங்களுடைய ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொண்டு, அதனை வலு சேர்க்கும் இறைவழிபாட்டை மேற்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இதற்கான விவரமான மற்றும் விரிவான குறிப்புகளை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பின்வருமாறு பட்டியலிட்டிருக்கிறார்கள்.
பிறந்தது முதல் பத்து வயது வரை உள்ளவர்களுக்கு சந்திரன் பன்னிரண்டு ராசி கட்டத்தில் எங்கு இருக்கிறார்? என்பதையும், எந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார்? என்பதையும் துல்லியமாக அவதானித்து, அந்த நட்சத்திரத்தையும் சந்திரனுக்கு இடம் கொடுத்த வீட்டின் அதிபதி கிரகத்தையும் இயக்க வேண்டும்.
இதற்கு இத்தகைய ஆற்றல் வாய்ந்த தலங்களை திங்கட்கிழமைகளில் வழிபட தொடங்கினால்.. சந்திர பகவான் வலிமை அடைந்து, ஜாதகருக்கு சுப பலன்களை வழங்குவார். சிலருக்கு சந்திரன் நீசமாக இருந்தாலும் அவர்களுக்கு அம்பாள் வழிபாட்டையும் இணைத்து மேற்கொண்டால் சந்திர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
பத்து வயது மேல் இருபது வயது வரை உள்ளவர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்தில் புதன் பகவானின் வலிமையை துல்லியமாக ஆராய வேண்டும். புதன் பகவான் நின்ற நட்சத்திரம் - அமைந்திருக்கும் ராசி மற்றும் ராசியின் அதிபதி கிரகம் ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து, அதற்கு ஏற்ற ஆற்றல்களை கொண்ட ஆலயங்களில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். புதன் நீசம் அடைந்திருந்தாலும்.. இறைவழிபாட்டை தொடர்ந்து புதன்கிழமைகளிலும், அவர்கள் பிறந்த கிழமைகளிலும் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்.
இருபது வயது முதல் முப்பது வயது வரை உள்ளவர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் எங்கு இருக்கிறார்? என்பதனை துல்லியமாக அவதானிக்க வேண்டும். அவர் நின்ற நட்சத்திரத்திற்கு இடம் கொடுத்த ராசி அதிபதி ஆகியோரின் ஆற்றல் வாய்ந்த ஆலயங்களில் வழிபாட்டை மேற்கொண்டால் ...வாழ்க்கையில் அந்த காலகட்டத்திற்கு தேவையான திருமணம் உள்ளிட்ட தடைகளில் இருந்து நீங்கி, வாழ்க்கையில் வெற்றி பெற இயலும்.
முப்பது வயது முதல் நாற்பது வயது வரை உள்ளவர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவானை துல்லியமாக அவதானிக்க வேண்டும்.
செவ்வாய் நின்ற நட்சத்திரம்- செவ்வாய் அமைந்திருக்கும் ராசி அதிபதி- ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து, அதற்குரிய ஆற்றல் வாய்ந்த தலங்களில் வழிபாட்டை மேற்கொண்டால் ... தாமதங்கள் நீங்கி, நினைத்த காரியங்கள் விரைவில் நடந்தேறும்.
நாற்பது வயது முதல் ஐம்பது வயது வரையில் உள்ளவர்களுக்கு அவர்களது ஜாதகத்தில் சூரிய பகவானை பற்றி துல்லியமாக அவதானிக்க வேண்டும். சூரியன் நின்ற நட்சத்திரம் - சூரியன் நின்ற வீட்டின் அதிபதி - ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து, அதற்கு ஏற்ற பிரத்யேக ஆற்றல் வாய்ந்த தலங்களில் இறைவழிபாட்டை மேற்கொண்டால் ...சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைத்து வாழ்க்கையில் அந்த காலகட்டத்தில் கிடைக்க வேண்டிய சுப பலன் கிடைக்கும்.
ஐம்பது வயது முதல் அறுபது வயது வரை உள்ளவர்களுக்கு அவர்களது ஜாதகத்தில் சனி பகவானின் நிலையை துல்லியமாக அவதானிக்க வேண்டும். சனி பகவான் நின்ற நட்சத்திரம் - சனி பகவான் நின்ற ராசியின் அதிபதி - ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து அதற்கு பிரத்யேக ஆற்றல் வாய்ந்த ஸ்தலங்களை தெரிவு செய்து கொண்டு, அங்கு இறைவழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் மூலம் சனி பகவானின் பரிபூரண அருளை பெற்று, சுகவீனம் இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ இயலும்.
அறுபது முதல் எழுபது வயது வரை உள்ளவர்களுக்கு அவர்களது ஜாதகத்தில் ராகு பகவான் எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பதை துல்லியமாக அவதானிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் பிரத்யேக ஆற்றல் வாய்ந்த தலங்களுக்கு சென்று இறைவழிபாட்டை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். கடந்த காலத்தில் தவறவிட்ட வெற்றியை இந்த காலகட்டத்தில் ஈட்ட இயலும்.
எழுபது வயதிற்கு மேல் அவர்களுடைய ஆயுள் உள்ளவரை அவர்களது ஜாதகத்தில் கேது பகவான் எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார் ? என்பதனை துல்லியமாக அவதானிக்க வேண்டும் அதனைத் தொடர்ந்து அவர்கள் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்ந்திட வேண்டுமென்றால் கேதுவின் ஆற்றல் நிரம்பிய ஆலயங்களில் இறைவழிபாட்டை மேற்கொண்டால் சுப பலன் கிடைக்கும்.
இதன் மூலம் உங்களுக்கு எந்த வயதில் எம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட்டால்... அதற்குரிய கிரகங்கள் எதுவென்று அவதானித்து, அதனை வலுப்படுத்திக் கொள்வதன் மூலமாகவே வாழ்க்கையில் சுபமான பலன்களை பெறலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM