நான் கேரியஸ் லீஸன்ஸ் எனும் பற்களில் ஏற்படும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

09 Oct, 2026 | 02:31 PM
image

எம்மில் பலரும் பற்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்... அதற்கு கிருமிகள் தான் காரணம் என அவதானித்திருப்போம்.

ஆனால் கிருமிகளின் பாதிப்பு இல்லாமல், வேறு காரணங்களால் எம்முடைய பற்களில் உள்ள கடினமான திசு என கருதப்படும் எனாமல் மட்டும் டென்டின் ஆகியவற்றில் தேய்மானம் அல்லது சிதைவு ஏற்படும்.

இதனை மருத்துவ மொழியில் நான் கேரியஸ் லீசன்ஸ் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு பிரத்யேக சிகிச்சை மூலம் நிவாரணம் பெறலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக எம்மில் பலரும் பற்களின் ஆரோக்கியத்திலும், பற்களின் சுகாதாரத்திலும் அதீத கவனத்தை செலுத்துவதில்லை. ஆனால் பற்களில் சிறிய அளவில் கூச்சமோ, வலியோ, அசௌகரியமோ, ஏற்பட்டால், அதனை அவர்களால் எளிதாக எதிர்கொள்ள முடிவதில்லை.

இந்த நிலையில் பல் கூச்சம் என்பது சிலருக்கு மரபணு குறைபாட்டின் காரணமாக தொடர்ச்சியாக இருந்து வரும்.

மேலும் சிலர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுகிறேன் என சொல்லிக்கொண்டு பற்களை நன்றாக கடித்துக் கொள்வார்கள். இப்படி பற்களை ஒன்றுடன் ஒன்று நன்றாக கடிப்பதன் மூலம் பற்களின் மேற்பரப்பு தேய்மானம் அடைந்து சிதைவடைகிறது.

வேறு சிலர் சுற்றுலா செல்லும்போது இயற்கையான வழிமுறை என நண்பர்களின் வழிகாட்டலின் படி பல் தேய்ப்பதை வேறு பொருட்களால் மேற்கொள்வர். இத்தகைய தருணங்களில் பற்களை தவறான முறையில் கூடுதல் அழுத்தம் கொடுத்து தேய்ப்பதால் ஈறுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் சிலர் எப்போது பசியாறினாலும் அதனுடன் குளிர்ந்த குளிர்பானங்களையும் அல்லது அதிக அமிலத்தன்மை வாய்ந்த உணவுகளையும் பசியாறுவார்கள். இதன் காரணமாகவும் எம்முடைய பற்களின் மேற்பகுதியும், எனாமல் எனும் பகுதியும் கரையத் தொடங்குகிறது.

வேறு சிலர் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில் தங்களுடைய மன இறுக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக தாடையை தவறாக பாவிப்பார்கள். இதன் காரணமாகவும் பற்களின் திசுக்கள் பாதிப்படைய கூடும்.

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் அவை நான் கேரியஸ் லீசன்ஸ் என கருதப்பட்டு, அதற்கான பிரத்யேக பரிசோதனைகளும், நவீன தொழில்நுட்பத்துடன் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சையையுமா வழங்கி நிவாரணம் தருவர். வெகு சிலருக்கு மட்டுமே சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவர்.

வைத்தியர் லாவண்யா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூக்கடைப்பு பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை-...

2026-11-14 15:45:24
news-image

இரத்த நாள அடைப்பை நீக்கும் நவீன...

2026-11-13 15:26:37
news-image

பிட்யூற்றரி மேக்ரோஅடினோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய...

2026-11-12 15:10:08
news-image

பெல்விக் அசிடபுலர் ஃப்ராக்சர் எனும் இடுப்பு...

2026-11-11 16:42:12
news-image

ஸ்போண்டிலோஸிஸ்டெசிஸ் எனும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும்...

2026-11-10 15:59:08
news-image

நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-11-07 16:35:21
news-image

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனும் இதய தசை...

2026-11-06 18:17:18
news-image

பித்தப்பை சுவர் சிதைவு நோய் பாதிப்பிற்கான...

2026-11-05 16:52:08
news-image

அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

2026-11-04 14:01:10
news-image

கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை...

2026-11-03 14:47:47
news-image

வாஸ்குலர் ரிங் எனும் பிறவி இதயக்...

2026-11-02 13:47:27
news-image

கான்ட்ராஸ்ட் இன்டீயூஸ்டு கிட்னி இன்ஜுரி எனும்...

2026-10-31 14:40:04