நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

09 Oct, 2026 | 02:30 PM
image

சிறிய முதலீட்டில் தயாராகும் தமிழ் திரைப்படங்களுக்கு வணிக ரீதியிலான பேராதரவை வழங்கி வரும் நட்சத்திர நடிகரான வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பரிட்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு, இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், நடிகர் ஆரி அர்ஜுனா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ஹாரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பரிட்' திரைப்படத்தில் வெற்றி, அக்ஷிதா, சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கே வி கிரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைத்திருக்கிறார்.

இன்வெஸ்டிகேட்டட் க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடிகர் வெற்றி கம்பீரமாக தோன்றுவது ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பொலிமேரா...

2026-11-10 16:28:21
news-image

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை...

2026-11-10 16:27:29
news-image

அறிமுக நடிகர் தீரன் நடிக்கும் 'வோல்டேஜ்'...

2026-11-10 16:27:07
news-image

நடிகர் நாகார்ஜூனாவின் 'கிங் 100' படத்தில்...

2026-11-10 16:26:34
news-image

விஜய் அண்டனியின் 'அப்பா குட்டி '...

2026-11-10 15:59:28
news-image

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி...

2026-11-09 16:34:53