பான் இந்திய நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக- சரித்திரத்தில் மறைக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வீரத்துடன் நடித்திருக்கும் 'ரண பலி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரண பலி' திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தானா, ஹொலிவுட் நடிகர் அர்னால்டு வாஸ்லோ ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
நீரவ் ஷா மற்றும் ஜிஷ்ணு பட்டாச்சாரியார் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜய் - அப்துல் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
ஆங்கிலேயர் காலகட்டத்தில் இந்திய மண்ணில் நடைபெற்ற சரித்திர சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் ஆங்கிலேயர் காலகட்டத்தில் புகையிரதத்திற்கான தண்டவாள பாதை அமைப்பது தொடர்பான சம்பவங்கள் இடம் பிடித்திருப்பதும், அந்த காலகட்டத்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தையும், இந்திய அடிமைத்தனத்தை பற்றியும், விவரிக்கும் காட்சிகளும், இதில் இந்தியர்களுக்கு ஆதரவாகவும் ஆங்கிலேயருக்கு எதிர்ப்பாகவும் குரல் கொடுக்கும் 'ரண பலி' எனும் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி இருப்பதால் படத்திற்கு தேச பக்தி & தேசப்பற்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் ஏற்பட்டிருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM