சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும் 'ட்ரோன்ஸ்' படத்தின் றாப் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

09 Oct, 2026 | 02:11 PM
image

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளான சித்தி இத்னானி, தேவதர்ஷினி, அஞ்சலி நாயர் ஆகிய மூவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'ட்ரோன்ஸ்' படத்தில் இடம்பெற்ற 'டெரர் எரர் ' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ட்ரோன்ஸ்' திரைப்படத்தில் சித்தி இத்னானி , அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேசி, சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஆர்.ஹரி இசையமைத்திருக்கிறார்.

கொமடி வித் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி எம் மார்கன் பிலிம்ஸ் சார்பில் ஜி.எம். மார்கன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற' பறக்க விடுவேன் எலும்புக்கூட.. மொறச்சி காட்டாத மதர் போர்டா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர்கள் இயக்கி பெர்ரி கானா கௌதம் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள்.

இந்தப் பாடலை இசையமைப்பாளரும், பாடகருமான எஸ். ஆர். ஹரி, இயக்கி பெர்ரி, கெலுத்தி, கானா கௌதம், ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். றாப் இசை பாணியில் உருவாகி இருக்கும் இந்த பாடலில் இடம் பிடித்திருக்கும் தங்கிலீஷ் வார்த்தைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பொலிமேரா...

2026-11-10 16:28:21
news-image

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை...

2026-11-10 16:27:29
news-image

அறிமுக நடிகர் தீரன் நடிக்கும் 'வோல்டேஜ்'...

2026-11-10 16:27:07
news-image

நடிகர் நாகார்ஜூனாவின் 'கிங் 100' படத்தில்...

2026-11-10 16:26:34
news-image

விஜய் அண்டனியின் 'அப்பா குட்டி '...

2026-11-10 15:59:28
news-image

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி...

2026-11-09 16:34:53