சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

09 Oct, 2026 | 02:09 PM
image

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சீன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆத்தி இவ யார்ரா' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வினித் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுசின் ஷியாம் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சூர்யா - ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'யார்ரா நீ .டா டா டா டர்ர்ருங்குதா..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் ராஜ் பிரியன் எழுதி, பாடியிருக்கிறார்.

பாடலின் வரிகள், அதற்கான பின்னணி காட்சி அமைப்பு ஆகியவை அனைத்து தரப்பு இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பொலிமேரா...

2026-11-10 16:28:21
news-image

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை...

2026-11-10 16:27:29
news-image

அறிமுக நடிகர் தீரன் நடிக்கும் 'வோல்டேஜ்'...

2026-11-10 16:27:07
news-image

நடிகர் நாகார்ஜூனாவின் 'கிங் 100' படத்தில்...

2026-11-10 16:26:34
news-image

விஜய் அண்டனியின் 'அப்பா குட்டி '...

2026-11-10 15:59:28
news-image

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி...

2026-11-09 16:34:53