டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன் சுப்பர் லீக் தரமிறக்கல் சுற்று இன்று ஆரம்பம்

09 Oct, 2026 | 03:16 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவந்த சுப்பர் லீக் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தரமிறக்கல் சுற்று இன்று வெள்ளிக்கிழமை (9) ஆரம்பமாகவுள்ளது.

பத்து அணிகள் பங்குபற்றிய சுப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் முதல் சுற்று நிறைவில் கடைசி நான்கு இடங்களைப் பெற்ற புளூ ஈக்ள்ஸ், டிபெண்டர்ஸ், வென்னப்புவை நியூ யங்ஸ், கொட்டாஞ்சேனை ரட்னம் ஆகிய கழகங்கள் தரமிறக்கல் சுற்றில் விளையாடுகின்றன.

தரமிறக்கல் சுற்றின் முதலாவது போட்டியில் டிபெண்டர்ஸ் கழகமும் வென்னப்புவை நியூ யங்ஸ் கழகமும் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் மோதுகின்றன.

இந்த இரண்டு கழகங்களும் சுப்பர் லீக்கில் மோதிக்கொண்டபோது டிபெண்டர்ஸ் கழகம் 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.

எவ்வாறாயினும் தரமிறக்கம் பெறுவதை எந்த அணியும் விரும்பாது என்பதால் என்ன விலைகொடுத்தேனும் இன்றைய போட்டியில் வெற்றி பெற இரண்டு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.

லீக் சுற்றில் டிபெண்டர்ஸ் எவ்சி 2 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவுகள், 6 தோல்விகள் என்ற பேறுபேறுகளைக் கொண்டிருந்தது.

நியூ யங்ஸ் கழகம் ஒரு வெற்றி, 2 வெற்றிதோல்வியற்ற முடிவுகள், 6 தோல்விகள் என்ற பெறுபேறுகளைக் கொண்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா - பூட்டான், பங்களாதேஷ் -...

2026-11-14 11:47:31
news-image

இந்தியாவை துவம்சம் செய்து  இரண்டாவது   மிகப்...

2026-11-14 06:39:43
news-image

மகளிர் முன்னேறிவரும் நாடுகள் கிரிக்கெட: ஸ்கொட்லாந்தை...

2026-11-14 04:23:55
news-image

இலங்கையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெஸ்ட் போட்டியை...

2026-11-14 04:20:49
news-image

பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல்,...

2026-11-12 16:45:31
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான  முதலாவது   டெஸ்ட் போட்டியில்...

2026-11-12 04:30:02
news-image

இங்கிலாந்திலிருந்து அழைக்கப்பட்ட ஹம்சா, பர்ஹான் ஆகியோர்...

2026-11-12 04:17:39
news-image

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி ;...

2026-11-11 16:08:40
news-image

நாங்கள் விளையாடுவது கால்பந்தாட்டம், கிரிக்கெட் அல்ல,...

2026-11-11 11:37:01
news-image

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்...

2026-11-11 06:24:07
news-image

அறிமுக வீரர்கள் மூவர் குவித்த அரைச்...

2026-11-10 19:32:54
news-image

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான...

2026-11-10 00:21:02