தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
கடந்த 6ஆம் திகதி தமிழகத்தில் உள்ள மதுராந்தகம் - தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (9) காலை 8 மணியளவில் தொடங்கியது. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதனைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
தாராபுரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் தருணத்தில் முன்னிலையில் இருந்த அதிமுக... 8வது சுற்றில் முடிவில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. முதலிடத்தில் தமிழக வெற்றி கழகம் 31,327 வாக்குகளை பெற்று முன்னணி வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் திமுக 25,841 வாக்குகளை பெற்றிருக்கிறது. அதிமுக 24,363 வாக்குகளை பெற்றிருக்கிறது.
மதுராந்தகம் தொகுதியில் நண்பகல் 12 மணி வரை எட்டு சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 31,333 வாக்குகளையும், திமுக 20,839 வாக்குகளையும் பெற்றிருக்கிறது. மூன்றாம் இடத்தில் அதிமுக 17,989 வாக்குகளை பெற்றிருக்கிறது.
இரண்டு தொகுதிகளிலும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக நடனமாடி வருகிறார்கள்.
இதனிடையே மதுராந்தகம் தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கும், தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்கு எண்ணும் மேசையில் வைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கையை இடைநிறுத்தம் செய்யவேண்டும் என முகவர்கள் புகார் அளித்தார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. இதன் காரணமாக மதுராந்தகம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியானது. அதன் பிறகு கட்டுப்பாட்டுக் கருவியை சீரமைத்த பிறகு, மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இரண்டு தொகுதிகளிலும் 15 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இத்தொகுதிகளுக்கான முடிவு இன்று மாலை வெளியாகும் என அவதானிக்கப்படுகிறது.
13வது சுற்று வாக்கு எண்ணிக்கைகளின் முடிவின் அடிப்படையில் தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் 6,420 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
எட்டு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவின்படி 10,494 வாக்குகள் வித்தியாசத்தில் மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் முன்னணியில் உள்ளது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்ட இடதுசாரிகள் மூன்று இலக்க எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றிருக்கிறார்கள் என்பதும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி நான்கு விளக்கத்தில் வாக்குகளை பெற்றிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதுராந்தகம்
த வெ க 38,128
தி மு க 25,354
அதிமுக 21,537
நா, த க 1,069
இடதுசாரி 866
தாராபுரம்
த வெ க 41,327
தி மு க 33, 263
அதிமுக 27,561
தா த க 3,361
இடதுசாரி 734


மரகதம் குமாரவேல் (த.வெ.க வேட்பாளர் - மதுராந்தகம் தொகுதி)

சத்தியபாமா (த.வெ.க வேட்பாளர் - தாராபுரம் தொகுதி)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM