மைக்ரோசொப்ட் , அடோப் மற்றும் முன்னணி இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தரக் குடியுரிமை (Green Card) பெறுவதற்காக பயன்படுத்தப்படும் 'நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில்' (PERM) இருந்து இடைநீக்கம் செய்ய அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டு மாணவர் மற்றும் தொழிலாளர் விசாக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஹார்வர்ட், யேல், ஸ்டான்போர்ட், எம்.ஐ.டி உட்பட 09 முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மீதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மைக்ரோசொப்ட் மற்றும் அடோப் தவிர, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சேர்வீசஸ் , இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல் மற்றும் காக்னிசன்ட் , கேப்ஜெமினி ஆகிய நிறுவனங்களும் இந்தத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பிடப்பட்ட நிறுவனங்களுக்காக இனி எந்தவொரு புதிய நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட மாட்டாது எனவும் அமெரிக்கத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
"அமெரிக்க ஊழியர்களை வேலைநீக்கம் செய்துவிட்டு, குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை H-1B மற்றும் கிரீன் கார்ட் மூலம் அமர்த்துவதை ஏற்க முடியாது. மைக்ரோசொப்ட் நிறுவனம் அமெரிக்கக் கட்டமைப்பு முறையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது" எனத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தாங்கள் தாக்கல் செய்த H-1B விண்ணப்பங்களில் 80 சதவீதம் நடப்பு ஊழியர்களின் காலவகாசத்தை நீடிப்பதற்கே பயன்படுத்தப்பட்டதாகவும், அமெரிக்க ஊழியர்களுக்கு இணையான ஊதியமே வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வழங்கப்படுவதாகவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM