பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளர் ஒருவர் மீது இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தவறாக நடக்க முயற்சித்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற போட்டித் தொடரொன்றின்போது, இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரியொருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றதாக, பாகிஸ்தானிய பெண் ஊடகவியலாளர் முனஸ்ஸா ஜிலானி புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவர், இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து இலங்கை கிரிக்கெட் சபையில் குறித்த அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அப்புகார் பற்றித் தனக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், அது குறித்த விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார்.