பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச் சேர்ந்த 44 அணிகள் போட்டிகள் வெள்ளிக்கிழமை காலை ஆரம்பம்

08 Oct, 2026 | 09:44 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கையில்  எதிர்கால கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் உயரிய நோக்குடன் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் 3ஆவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள 14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி கொழும்பில் அரங்கேற்றப்படவுள்ளது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நாளை வெள்ளிக்கிழமை (09) காலை 8.00 மணிக்கு தொடக்க விழா வைபவத்துடன் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டிகள் சனி, ஞாயிறு தினங்களில் தொடர்ந்து நடைபெறம்.

இந்த சுற்றுப் போட்டியில் 25 கால்பந்தாட்ட பயிற்சியகங்களை சேர்ந்த 44 அணிகள் பங்குபற்றவுள்ளன.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமரின் கால்பந்தாட்டத்தில் 'புதிய அத்தியாயம்' என்ற கருப்பொருளுக்கு அமைவாக இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்தும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஸ்தாபகரும் உரிமையாளருமான ஒகஸ்டின் ஜோர்ஜ் இந்த சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனம் (FIFA) அடுத்த வருடம் நடத்தவுள்ள 15 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கால்பந்தாட்டக் கொண்டாட்ட விழாவுக்கு வீரர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்வுக் களமாகவும் சம்மேளனக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படுவதாக சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர், மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக உரிமையாளர் ஒகஸ்டின் ஜோர்ஜ் ஆகிய இருவரும் தெரிவித்தனர்.

கால்பந்தாட்டப் பயிற்சியகங்களை ஊக்குவிப்பதே தனது நோக்கம் என தெரிவித்த ஜஸ்வர் உமர், இத்தகைய போட்டிகளை ஏற்பாடு செய்யும் சகல பயிற்சியகங்களுக்கும் ஒத்தாசை புரியத் தயார் என்றார்.

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் வடக்கு முதல் தெற்கு வரையும் கிழக்கு முதல் மேற்கு வரையும் உள்ள பயிற்சியங்கள் பங்குபற்றுவதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

போட்டியை முன்னின்று நடத்தும் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் 14 வயதின் கிழ் பிரிவில் 4 அணிகளையும் 16 வயதின் கீழ் பிரிவில் 2 அணிகளையும் களம் இறக்குகின்றது.

யாழ். திருக்குமரன், மன்னார் - எருக்கலம்பிட்டி யூத், கிண்ணியா, கந்தானை ZH ஆகிய கால்பந்தாட்டப் பயிற்சியகங்கள் 16 வயதுக்குட்பட்ட பிரிவில் மாத்திரம் பங்குபற்றுகின்றன.

கிண்ணியா புட்போல், பலாங்கொடை QJ, ஸ்டார் ஈக்ள்ஸ், சப்புகஸ்கந்த ஆகிய பயிற்சியகங்கள் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் மாத்திரம் பங்குபற்றுகின்றன.

கோல்டன், ஹென்றி பேதிரிஸ், நிகம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், திஹாரிய யுனைட்டட், களனி, ஹில்ஸ், கலம்போ யூத், யுனைட்டட் மாவனெல்லை, யுனைட்டட் பென்தர்ஸ், கலீல், ப்ரிலியன்ட், ஜாவா லேன், கம்பளை தி ட்ரவலர்ஸ், பாணந்துறை ஆகிய கால்பந்தாட்டப் பயிற்சியகங்கள் இரண்டு வயது பிரிவுகளிலும் பங்குபற்றுகின்றன.

முதலில் லீக் சுற்றும் பின்னர் நொக் அவுட் சுற்றும் நடத்தப்படும்.  போட்டிகள் 30 நிமிடங்களைக் கொண்டது. 5 நிமிட இடைவேளை வழங்கப்படும்.

இரண்டு பிரிவுகளிலும் சம்பியனாகும் அணிகளுக்கு பெடரேஷன் கிண்ணங்களுடன் தலா 2 இலட்சம் ரூபா பணப்பரிசும் உப சம்பியனாகும் அணிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படும். இதனைவிட சிறந்த வீரர், அதிக கோல்கள் போடும் வீரர், சிறந்த கோல்காப்பாளர், நேர்த்தியான அணி ஆகிய விருதுகளும் வழங்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி ;...

2026-11-11 16:08:40
news-image

நாங்கள் விளையாடுவது கால்பந்தாட்டம், கிரிக்கெட் அல்ல,...

2026-11-11 11:37:01
news-image

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்...

2026-11-11 06:24:07
news-image

அறிமுக வீரர்கள் மூவர் குவித்த அரைச்...

2026-11-10 19:32:54
news-image

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான...

2026-11-10 00:21:02
news-image

'இறுதிப் போட்டியில் பங்களாதேஷும் இந்தியாவும் விளையாடட்டும்'...

2026-11-10 00:18:22
news-image

கொமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2026

2026-11-09 19:17:14
news-image

சாவ் சம்பின்ஷிப்பில் பூட்டானுக்கு எதிரான போட்டியில்...

2026-11-08 22:18:41
news-image

19இன் கீழ் ஆடவர் ஆசிய கிண்ண...

2026-11-06 20:56:55
news-image

குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட 3 நாள்...

2026-11-06 19:27:40
news-image

இளையோர் ஒலிம்பிக் ஆண்களுக்கான 200 மீற்றர்...

2026-11-06 18:12:26
news-image

இந்தியா – இலங்கை ஒருநாள் கிரிக்கெட்...

2026-11-06 09:30:30