கையகப்படுத்திய சகல தனியார் காணிகளையும் விரைவில் விடுவிப்பதில் உறுதியாக உள்ளோம் - விஜித ஹேரத் 

08 Oct, 2026 | 05:06 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்திய சகல தனியார் காணிகளையும் கூடிய விரைவில் விடுவிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். அதேபோன்று பாதுகாப்பு நிமித்தம் விடுவிக்க முடியாத காணிகள் இருப்பின் அவற்றுக்கு உரிய நட்டஈடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என  வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற அமர்வில் நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு விடயத்தில் பலாலி போன்ற பகுதிகளில் கடந்த காலங்களில் வீதித் தடைகள் போடப்பட்டு வீதிகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தன. ஆட்சிக்கு வந்தவுடன்  நாங்கள் அந்த தடைகளை நீக்கியுள்ளோம். தற்போது அந்த வீதிகள் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக  பயன்படுத்தப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறு பெருமளவிலான வீதித் தடைகள் அகற்றப்பட்டுள்ளன. வடக்கில் இப்போது ஒரு இராணுவ சோதனைச் சாவடியும் கிடையாது. இது தொடர்பில் மகிழ்ச்சியடைய வேண்டும். அதுபோன்ற முன்னேற்றங்கள் பல ஏற்பட்டுள்ளன.

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது முறையாக நடக்க வேண்டும். காணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டும். சில உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். மேலும் சிலர் இப்போது உயிருடன் இல்லை. அத்துடன் தாமே உரிமையாளர் என்று வேறு சிலர் வருகின்றனர். இதுபோன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பில் முறையாக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

எவ்வாறாயினும் கூடிய விரைவில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட சகல தனியார் காணிகளையும் விடுவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். 

விடுவிக்க முடியாமல் ஏதேனும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் அவற்றுக்கு நிச்சயமாக நியாயமான நட்டஈடு வழங்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03
news-image

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வால்...

2026-11-14 16:21:41
news-image

சட்டவிரோத கடற்றொழில் ஊடாகவே 300 மில்லியன்...

2026-11-14 15:49:51
news-image

மூச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாத...

2026-11-14 15:16:51