(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஊழலுக்கு எதிர்ப்பு என்கிறார்கள் .ஆனால் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராகவே எதிர்க்கட்சியினர் செயற்படுகிறார்கள். இவர்களின் இரட்டை நிலைப்பாடு மிகவும் மோசமானது. ஊழல் எதிர்ப்புச் (திருத்தச்) சட்டமூலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விலக்களிக்கப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) வியாழக்கிழமை நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஊழலுக்கு எதிர்ப்பு என்று குறிப்பிடுகிறார்கள். ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டும், சட்டத்தால் தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.ஆனால் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராகவே எதிர்க்கட்சியினர் செயற்படுகிறார்கள்.இவர்களின் இரட்டை நிலைப்பாடு மிகவும் மோசமானது.
ஊழலுக்கு எதிர்ப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சியினர் இரவில் ஊழல்வாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.டீல் செய்கிறார்கள். 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் ஊழல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா என்பதை ஆராய வேண்டும்.
உண்மையை மறைப்பதற்காகவும், மக்களை தவறாக வழிநடத்தி எதிர்க்கட்சியினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். மக்கள் மாற்றமடைந்து விட்டார்கள் என்பதை ஏன் இவர்கள் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க கூடாது என்று ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும்போது மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் எதிர்க்கட்சியினர் தெரிந்தே பொய்யுரைக்கிறார்கள்.
ஊழலுக்கு எதிராக சிறந்த முறையில் முன்னெடுக்கும் பணிகளை பலவீனப்படுத்துவதற்காகவே எதிர்க்கட்சியினர் இவ்வாறு போலியான குற்றச்சாட்டுகிறார்கள். இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போன்றே ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க எதிர்தரப்பினர் முயற்சிக்கிறார்கள். இவர்களின் நோக்கம் ஒருபோதும் வெற்றிப்பெறாது என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM